செய்தி
தாய்லாந்தில் தங்கியிருந்த 64 இலங்கையர் கைது
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:06.01 AM GMT ]
தாய்லாந்தின் பட்டாய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 64 இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்க இவர்கள் குறித்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து தாய்லாந்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குடிவரவு அதிகாரிகளுடன் இணைந்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து முகவர்கள் ஊடாக லீம் சபாங் துறைமுகத்தில் இருந்து படகு மூலம் வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு படகு மூலம் 100க்கும் மேற்பட்டவர்கள் தாய்லாந்தில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களிடம் சுற்றுலா விசா காணப்பட்டதாகவும் அவர்களுடைய கடவுச்சீட்டு பறி முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்படவுள்ள தாகவும் தாய்லாந்து குடிவரவு பிரிவு தகவல்கள் கூறுகின்றன.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 13-02-2016, 06:29.14 AM ]
காட்டு யானை மீது மோதி புரண்ட லொறி ஒன்றுடன், வான் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
[ Saturday, 13-02-2016, 06:27.36 AM ]
தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதற்கும் தாம் தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016, 06:00.48 AM ]
வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 13-02-2016, 05:53.19 AM ]

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனது சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக செயற்பட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

[ Saturday, 13-02-2016, 05:27.45 AM ]
இலங்கை மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கு இடையில் நேற்று (12)  சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
[ Saturday, 13-02-2016 00:13:49 GMT ]
ஸ்பெயின் நாட்டில் அரசு ஊழியர் ஒருவர் ஆறு ஆண்டுகளாக அலுவலகம் செல்லாததை கண்டறிந்த நிர்வாகம் பெரும் தொகையை அபராதமாக விதித்துள்ளது.
[ Saturday, 13-02-2016 00:22:14 GMT ]
குஜராத்தில் நடத்தி வரும் இடஒதுக்கீடு போராட்டத்தை கைவிட்டால் ரூ.1,200 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டது என்று ஹார்திக் படேல் குற்றம்சாட்டியுள்ளார்.
[ Saturday, 13-02-2016 06:19:40 GMT ]
ராஞ்சியில் நடந்த 2வது டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பந்துவீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ரா தனது ‘யார்க்கர்’ பந்தால் இலங்கை வீரர்களை மிரள வைத்தார்.
[ Friday, 12-02-2016 15:01:48 GMT ]
உணவு பதார்த்தங்களில் மிகுந்த சத்துக்கள் நிறைந்தது என்றால் அது கீரை தான். எண்ணற்ற பலன்கள் கீரையில் அடங்கியுள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.