செய்தி
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை! தமிழ்க் கனேடியர்கள் விளக்கம்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:33.40 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக இரண்டு தமிழ்க் கனேடியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என அமெரிக்காவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு தமிழ் கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்டர்லு சுரேஸ் எனப்படும் 32 வயதான ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் 36 வயதான பிரதீபன் நடராஜா ஆகிய இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இரண்டு தமிழ் கனேடியர்களுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் அண்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.

நியூயோர்க் நீதிமன்றில் குறித்த இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இருவருக்கும் பிணை வழங்குவது தொடர்பான கோரிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 9ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நடராஜா ஆகியோருக்கு எதிராக 2006ம் ஆண்டில் அமெரிக்க நீதிமன்றில வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நடராஜா தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்பில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகவும், ஸ்ரீஸ்கந்தராஜா நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்ப மென்பொருளைக் கொள்வனவு செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் குறித்த இருவரும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை எனவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனவும் சட்டத்தரணிகளின் ஊடாக நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 01-03-2015, 06:12.54 AM ]
வவுனியா - ஓமந்தை பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
[ Sunday, 01-03-2015, 05:50.35 AM ]
அரசாங்க ஊழியர்களுக்கான புதிய சம்பள வியூகமொன்றை தயாரிப்பதற்கு அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
[ Sunday, 01-03-2015, 05:39.59 AM ]
போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்களை சுற்றிவளைப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
[ Sunday, 01-03-2015, 05:08.35 AM ]
பொதுத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 01-03-2015, 04:57.40 AM ]
எவன்காட் விவாதத்திற்கு வரவேண்டிய எவ்வித அவசியமும் எனக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 01-03-2015 06:37:49 GMT ]
உலகில் கடந்த வாரம் நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களின் புகைப்பட தொகுப்புகள் இதோ,
[ Sunday, 01-03-2015 06:03:50 GMT ]
பிரபல இந்தி நடிகை சோனம்கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Sunday, 01-03-2015 06:11:59 GMT ]
ஜிம்பாப்வே அணிக்கு உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் ஓட்டங்கள் சேர்க்க முடியாமல் திணறி வருகிறது.
[ Saturday, 28-02-2015 14:16:51 GMT ]
கர்ப்பமாக இருக்கும் போது சூடான பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்வதுண்டு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 27-02-2015 10:24:25 ]
இன்று வடக்கு- கிழக்கு மாகாண சபையின் செயற்பாடுகளில் அதிகம் கவனம் செலுத்தும் மாகாணங்களாக இலங்கையில் இருக்கின்றது.