கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், கஜேந்திரகுமார் தற்போது வெளிநாடொன்றுக்கு விஜயம் செய்துள்ளார்.
தமிழ்த் தேசிய முன்னணியைச் சேர்ந்த நபர் ஒருவர் பல்கலைக்கழக மாணவர்களை தூண்டி விடுவதாகவும், புலி ஆதரவு புலம்பெயர் சமூகத்துடன் தொடர்புகளைப் பேணுவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
சில காலங்களுக்கு முன்னதாக பத்தாயிரம் படைவீரர்களை சவப்பெட்டிகளில் கொழும்பிற்கு அனுப்பி வைப்பேன் என குறித்த நபர் எச்சரிக்கை விடுத்திருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.