செய்தி
(2ம் இணைப்பு)
 
வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறிய மூவின மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!- முஸம்மில்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 12:53.47 AM GMT ]
வடக்கு கிழக்கிலிருந்து வெளியேறிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும்.

1990ம் ஆண்டில் புலிகளினால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்கள் மீள அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த கருத்து வரவேற்கப்பட வேண்டியது, அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி; சிங்கள மற்றும் புலி எதிர்ப்பு தமிழர்களும் போர் இடம்பெற்ற காலத்தில் உடமைகளை இழந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

இவ்வாறானவர்களுக்கும் தங்களது உடமைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதம் காரணமாக இருப்பிடங்களை இழந்த அனைவரும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி, கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2ம் இணைப்பு

மீள்குடியேற்றத்துக்கு அமைச்சர் தேவாநந்தா ஏற்பாடுகளை செய்யவேண்டும்!-  தேசிய சுதந்திர முன்னணி கோரிக்கை

வடக்கிலும் கிழக்கிலும் இருந்து இடம்பெயர்ந்த தமிழ் சிங்கள முஸ்லிம மக்களை மீண்டும் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவிடம் கோரியுள்ளது.

அந்த முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

போருக்கு பின்னர் தமது இருப்பிடங்களுக்கு திரும்ப எவருக்கும் இடைத்தரகர் தேவையில்லை என்று அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா கூறியிருந்தமைக்கு பதிலளிக்கும் முகமாகவே முஸம்மில் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

வடக்குகிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களுக்கும் மீண்டும் சொந்த இடங்களுக்கு செல்ல வழிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

அதற்கு அமைச்சர் தேவாநந்தா ஆவன செய்யவேண்டும் என்று முஸம்மில் கோரியுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 24-07-2014, 04:15.57 AM ]
இலங்­கையில் எந்­த­வி­த­மான வெளி­நாட்டுத் தலை­யீ­டு­க­ளுக்கும் இந்­தியா எதிர்ப்பு தெரி­விக்­கின்­றது. அத­னால்தான் ஜெனி­வாவில் இலங்கை பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பில் இந்­தியா கலந்­து­கொள்­ள­வில்லை. எதிர்­கா­லத்­திலும் இந்­தியா இவ்­வா­றே செயற்படும் என்று இந்­திய ஆளும் கட்­சி­யான பார­திய ஜனதாக் கட்­சியின் தேசிய செயற்­குழு உறுப்­பினர் கலா­நிதி சேஷாத்ரி சாரி தெரி­வித்தார்.
[ Thursday, 24-07-2014, 03:55.58 AM ]

வட பகுதியில் இராணுவத்தை விலக்காமல் மேலும் விஸ்தரிப்பதுடன், தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் தன்மையின் உச்சத்தால் நில அபகரிப்பு, சிறுமி மீதான வன்புணர்வு போன்ற சம்பவங்கள் வடமாகாண இராணுவ பிரசன்னத்தின் கொடூர தன்மையை புடம் போட்டுக்காட்டுகிறது என்கிறார் சி.பாஸ்க்கரா.

[ Thursday, 24-07-2014, 03:34.54 AM ]

இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்தும் விசாரணையை விஞ்சும் வகையில் எமது குழுவின் விசாரணைகள் அமையும். இவ்வாறு காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

[ Thursday, 24-07-2014, 03:22.18 AM ]
சீனாவின் உதவியுடன் விமான பழுது பார்த்தல் வசதிகளை கொண்ட பராமரிப்பு நிலையம் ஒன்றை திருகோணமலையில் அமைக்க திட்டமிட்ட போதும் அதன் நிர்வாகம் முழுமையாக இலங்கை விமானப்படையினரிடமே இருக்கும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 24-07-2014, 03:07.26 AM ]
தமிழர்களின் மீதான இனவழிப்பில் வடுவாகி நிலைத்துவிட்ட கறுப்பு ஜுலையின் 31வது வருட நினைவுநாளான நேற்று லண்டனில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
[ Thursday, 24-07-2014 03:02:10 GMT ]
காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ரொக்கெட் தாக்குதல் காரணமாக பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவையை இடை நிறுத்தியுள்ளன.
[ Wednesday, 23-07-2014 11:24:01 GMT ]
சுனந்தாவை விவாகரத்து செய்து விட்டு மஹர் தரரை திருமணம் செய்ய சசி தரூர் திட்டமிட்டிருந்ததாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
[ Wednesday, 23-07-2014 12:59:05 GMT ]
இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் உத்திகளை விமர்சனப்படுத்திய ஷேன் வார்னுக்கு டோனி பதிலளித்துள்ளார்.
[ Wednesday, 23-07-2014 12:57:03 GMT ]
காலிஃபிளவரின் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.
[ Wednesday, 23-07-2014 18:53:54 GMT ]
சமீபத்தில் அஞ்சான் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன் எடக்கு முடக்கான ஒரு வெடிகுண்டை போட்டார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 23-07-2014 09:00:23 ] []
தமிழரின் வரலாற்றில் முக்கியமான ஒரு தாக்குதல் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது.