குறித்த பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 20 ஆயிரம் ரூபா வரை செலவாவதாக தெரிவிக்கப்படடுள்ளது.
இந்த கிறிஸ்மஸ் நாட்களில் ஏனைய செலவுகளுடன் 20 ஆயிரம் ரூபாவை பயிற்சிகளுக்காக செலவிடுவது பாரிய சிரமமமான காரியம் என்று பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
பயிற்சிக்கு செல்லும் மாணவர்களிடம் இரண்டு வெள்ளை நிற கட்டில் விரிப்பு, இரண்டு தலையணை உறைகள், சப்பாத்துக்கள் உட்பட்ட பொருட்களை எடுத்து செல்லுமாறு கோரப்படுகின்றனர்.
இந்தநிலையில் குறித்த இராணுவப்பயிற்சி நேரத்தையும் பணத்தையும் விரயமாக்கும் விடயம் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் கருத்துரைக்கையில், மாணவர்களுக்கு இராணுவப்பயிற்சிகள் வழங்கப்படுவதை தாம் எப்போதும் எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்பயிற்சிகளுக்காக செலவிடும் பணத்தை பல்கலைக்கழகங்களின் மேம்பாட்டுக்கு செலவிடமுடியும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.