நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் வர்த்தகரும் முன்னாள் ஆசிரியருமான எஸ்.சபாநடேசன் (வயது 55) என்பவரே உயிரிழந்தவராவார்.
காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து காவடி எடுத்து ஈழத்துச் சிதம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே இவர் மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார்.
குறித்த நபரை உறவினர்கள் உடனடியாக காரைநகர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் சிகிச்சை பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.