இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற படைச் சிப்பாயும் மற்றுமொரு நபரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
5000 ரூபா மற்றும் 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் இவ்வாறு அச்சிடப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களிடமிருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 18ம், 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 160ம் மீட்கப்பட்டுள்ளன.
முன்னாள் இராணுவச் சிப்பாய் கண்டி கிரிபத்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
போலி கடவுச் சீட்டு உள்ளிட்ட வேறும் போலி ஆவணங்களையும் குறித்த நபர்கள் தயாரித்துள்ளனர்.
ஏனைய சந்தேக நபர் கண்டி கட்டுகஸ்தோட்ட பிரதேச நிறுவனமொன்றின் கணனி இயக்குனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
போலி நாணயத்தாள் அச்சிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட கணனி உள்ளிட்ட சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.