செய்தி
சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு தொடர்பான பிரசாரங்கள் அடிப்படையற்றவை!- நீதியமைச்சர் ஹக்கீம்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 01:21.58 AM GMT ]
சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு தொடர்பான பிரச்சாரங்கள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அரசியல் எதிரிகள் தங்களது குறுகிய உள்நோக்கங்களை அடைவதற்காக இவ்வாறு பிரசாரம் செய்வதாக ஹக்கீமின் ஊடகச் செயலாளர் ஏ.ஆர்.எம் ஹபீஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டுக்கான சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வு பெறுபேறுகள் தொடர்பில் பல தரப்பினர் நீதியமைச்சர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

சட்டக்கல்லூரி நுழைவுத் தேர்வு ஆங்கில வினாத்தாளை தமிழ் மொழியில் முஸ்லிம்களே மொழிபெயர்ப்பு செய்துள்ளதாகவும், வினாத்தாள்கள் முஸ்லிம் பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிச் சேவையில் அதிகளவான முஸ்லிம்களை உள்வாங்கும் நோக்கில் இவ்வாறு வினாத்தாள் பரீட்சார்த்திகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படையற்றவை, இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு பிரசாரம் செய்யப்படுகின்றது.

மாணவர்களை உள்வாங்குதல் உள்ளிட்ட சட்டக்கல்லூரியின் நடவடிக்கைகளை பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவினரே மேற்கொள்வதாகவும், இந்த நடவடிக்கைகளில் நீதியமைச்சர் நேரடியாக தலையீடு செய்வதில்லை எனவும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு சர்ச்சை தொடர்பில் சுயாதீன விசாரணைகளை நடாத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 04:43.40 AM ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013, 04:16.26 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
[ Wednesday, 19-06-2013, 03:11.54 AM ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013, 02:58.49 AM ]

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

[ Wednesday, 19-06-2013, 02:51.32 AM ]

வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013 04:48:54 GMT ]
பாகிஸ்தானுக்குள் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் புனிதப் போர் ஆகாது என லஷ்கர்- இ- தொய்பா இயக்கத்தை நிறுவிய ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 05:15:54 GMT ]
திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் உறவு வைத்து கொண்டால் சட்டப்படி அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 03:42:01 GMT ]
ஒருநாள் சர்வதேச போட்டி அரங்கில் 11 ஆயிரம் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை இலங்கை அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர் மஹேல ஜெயவர்தன கடந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 01:57:01 GMT ]
தற்போது காணப்படும் உலங்கு வானூர்திகளிலேயே அதி வேகம் கொண்ட புதிய உலங்கு வானூர்தி உருவாக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 19-06-2013 04:04:47 GMT ]
தன்னுடன் பணியாற்றிய நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார் ஹன்சிகா.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.