செய்தி
இறுதிப்போர் சுயாதீன விசாரணைக்கு இந்தியா, இலங்கையை இசையச் செய்ய வேண்டும்: தெ டிப்ளொமெட்
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:11.24 AM GMT ]

இலங்கையின் இறுதிப்போர் உரிமைமீறல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைக்கு இந்தியா உந்துதலை கொடுக்க வேண்டும். அதற்காக இந்தியா தமது செல்வாக்கை இலங்கையின் மீது பிரயோகிக்க வேண்டும் என ஜப்பானில் இருந்து வெளியாகும் (The Diplomat ) தெ டிப்ளொமெட் என்ற இணையத்தளம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு போருக்கு இந்தியா பாரிய உதவிகளை அளித்துள்ளது.

இந்தியா, இலங்கையின் போருக்கு ஆயுத உதவிகளை வழங்கவில்லை என்று கூறிவந்தபோதும் இந்தியா வழங்கிய எம்ஐ 17 ரக ஐந்து ஹெலிகொப்டர்கள் மூலமே விடுதலைப்புலிகளின் பல தடைகளை இலங்கைப்படையினரால் தகர்க்கமுடிந்தது என்று தெ டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

இதற்காக நிட்டின் குஹ்லே என்ற செய்தியாளர் எழுதிய இலங்கை தொடர்பான “போரில் இருந்து சமாதானம்” என்று நூலை டிப்ளொமெட் சுட்டிக்காட்டியுள்ளது.

2006 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தநூலில் குஹ்லே இந்தியா, இலங்கைக்கு 5 எம் ஐ 17 ஹெலிகொப்டர்களை விடுதலைப் புலிகளுக்கான போரில் பயன்படுத்துவதற்காக வழங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெ டிப்ளொமெட் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் இறுதிப்போரில் பொதுமக்கள் பாரியளவில் கொல்லப்பட்டமையை ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு உறுதிசெய்துள்ளது. இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சபை தாமே முன்வந்து இறுதிப்போரின் போது பொதுமக்களை பாதுகாக்க தாம் தவறிவிட்டமையை ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கை மீது வரலாற்று ரீதியான செல்வாக்கை கொண்டுள்ள இந்தியா, ஐக்கிய நாடுகளில் கொண்டு வரப்பட்ட இலங்கைக்கு எதிரான அமெரிக்கப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை பெறுமதிவாய்ந்த நிகழ்வாகும்.

இது இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக இந்தியா காட்டிய அதிருப்தியாகவும் இருக்கலாம்.

எனினும் தொடர்ந்தும் கொழும்பு அரசாங்கத்தில் தமது செல்வாக்கை செலுத்தி வரும் இந்தியா, இறுதிப்போரின் மீறல்கள் தொடர்பான சுயாதீன விசாரணைக்கு இலங்கையை இசையச்செய்ய வேண்டியது அவசியம் என்று தெ டிப்ளொமெட்டின் செய்தியாளர் பிரட்யுஸ் என்பவர் வலியுறுத்தியுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 02:18.42 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமிழ் மக்களுக்கச் சொந்தமான 2ஆயிரத்து 590ஏக்கர் விவசாய நிலம் 1983ம் ஆண்டின் பின்னர் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை விடுவிக்க வலியுறுத்தி நிலத்திற்குச் சொந்தமான தமிழ் மக்கள் வெலிஓயா பிரதேச செயலகத்திடம் மகஜர் கையளித்துள்ளனர்.
[ Thursday, 20-06-2013, 01:46.54 AM ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
[ Thursday, 20-06-2013, 01:38.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.  விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 12:37.55 AM ]
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 12:26.31 AM ]

30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.  இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.