செய்தி
யாழ் பல்கலை மாணவர்களின் புனர்வாழ்வு சட்டவிரோதம்!- சரத் பொன்சேகா
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 04:11.55 AM GMT ]

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதம் எனவும், தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பாதுகாப்புச் செயலாளரும், குற்றப் புலனாய்வுப் பிரிவும் தவறாகப் பயன்படுத்தியுள்ளார்கள் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இல்லாத நிலையில், நீதிமன்ற உத்தரவுமின்றி எந்தச் சட்டத்தின் பிரகாரம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டிலுள்ள சட்டதிட்டங்கள் அனைவருக்கும் சமனானதாக இருத்தல் வேண்டும். வடக்கு, கிழக்கு மக்களுக்கோ அல்லது எந்தவொரு தரப்புக்கோ இதில் பாகுபாடு இருத்தல் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுள் நால்வர் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்ட விவகாரம் மற்றும் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

யாரேனும் ஒருவரைக் கைதுசெய்வதாக இருந்தால் அந்த நடவடிக்கை, சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். எவ்வித பாகுபாடும் இருத்தலாகாது. ஏனெனில், சட்டம் யாவருக்கும் சமனானதொன்றாகும்.

நாட்டில் தற்போது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இல்லை. எனவே, கைது செய்யப்பட்டவர்களை தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கோ, புனர்வாழ்வுக்கு உட்படுத்துவதற்கோ நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புனர்வாழ்வு முகாமுக்கு நீதிமன்ற உத்தரவின்றியே மாற்றப்பட்டுள்ளனர்.

அப்படியானால், எந்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது?

பாதுகாப்புச் செயலாளரும், பாதுகாப்புத் தரப்பினரும் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அப்பால் சென்று சட்டவிரோதமான முறையில் இந்த விடயத்தில் செயற்பட்டிருப்பார்களானால் அது கண்டிக்கத்தக்கதாகும்.

அதேவேளை, பிரதம் நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையானது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் ஆரம்பம் முதலே கூறிவருகின்றோம்.

பழிவாங்கல் நடவடிக்கைக்குப் புறம்பாக இதில் வேறொன்றும் இல்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 20-06-2013, 01:46.54 AM ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
[ Thursday, 20-06-2013, 01:38.26 AM ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.  விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
[ Thursday, 20-06-2013, 12:37.55 AM ]
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ Thursday, 20-06-2013, 12:26.31 AM ]

30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.  இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 

[ Wednesday, 19-06-2013, 11:34.58 PM ]
ஒன்றுக்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்றிணைவதை தடுக்கும் நோக்கில் கொண்டுவர தீர்மானித்திருந்த 19வது திருத்தச் சட்டமூலத்தை அரசாங்கம் பிற்போட்டுள்ளதாக தெரியவருகின்றது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.