இன்று அதிகாலை மீன்பிடித்தொழில் ஈடுபட்டடிருந்த இந்திய மீனவர்களின் வலைகள் கடற்கடையினரின் டோறா படகுகளினால் அறுக்கப்பட்டது.
அறுக்கப்பட்ட வலைகள் இயந்திரத்தில் சிக்குண்டதால் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதையடுத்து, கடற்படையினருக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
அதில் இருந்த 7 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் அவர்களை மாதகல் கரைக்கு கொண்டு வந்ததுடன் படகினையும் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
கரைக்கு கொண்டு வரப்பட்ட இந்திய மீன்வர்கள் மீது கடற்படையினர் விசாரணை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.