ஆலையடிவேம்பு, தீவுக்காலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் எஸ்.யோன்வெஸ்லி (73வயது) என்பவரே இவ்வாறு குத்திச் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவி, நேற்று தனது பிள்ளைகளின் வீட்டிற்கு சென்றிருந்ததாகவும், இன்று காலை வீடு திரும்பியபோது கணவர் இறந்து கிடந்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.