செய்தி
பிரதம நீதியரசரை இழிவுபடுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கம்!– ஐ.தே.க
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 11:01.42 AM GMT ]
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையின் போது அவரை இழிவுபடுத்தும் விதமாக ஆளும் தரப்பினர் சிலரால்  எழுப்பப்பட்ட  வார்த்தைப் பிரயோகங்கள் ஒளி நாடாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளின் போது பிரதம நீதியரசரை ஆளும் கட்சி உறுப்பினர்கள் இழிவாகப் பேசியதாக, விசாரணைகளில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள் தொடர்பிலான ஒளி நாடாவிலிருந்து இந்த இழிவான வார்தைப் பிரயோகங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களின் முன் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரதம நீதியரசரை தெரிவுக்குழு விசாரணையின் போது யாரும் தூற்றவில்லை என்றும், விசாரணை தொடர்பிலான ஒளிநாடாவை தேவைப்பட்டால் சபாநாயகரின் அனுமதியுடன் பார்வையிடலாம் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 28-11-2014, 06:27.40 AM ]
அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 28-11-2014, 05:46.32 AM ]
2010 ஆம் ஆண்டு நடந்த கொலை ஒன்றை மறைக்க மரண விசாரணையின் போது பொய்யான சாட்சியத்தை வழங்கிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
[ Friday, 28-11-2014, 05:41.39 AM ]
எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கவேண்டும் என்பது தொடர்பில் அவசரப்பட்டு முடிவை அறிவிக்காது பக்குவமாக ஆராய்ந்து வடகிழக்கு மக்களின் கருத்தை அறிந்தபின் இதுதொடர்பில் கூறப்படும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களில் பலமுறை கூறியுள்ளார்.
[ Friday, 28-11-2014, 05:37.58 AM ]
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் பயணித்து கொண்டிருந்த போது, அந்நாட்டு கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் படகுடன் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
[ Friday, 28-11-2014, 04:21.43 AM ]
முயற்சி திருவிணையாக்கும் என்பதற்கு தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் முன்னுதாரணமாக விளங்குகிறது.
[ Friday, 28-11-2014 06:19:43 GMT ]
ரஷ்யாவில் மொடல் அழகியான 9 வயது சிறுமி ஒருவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் .
[ Thursday, 27-11-2014 12:54:54 GMT ]
குஷ்பு காங்கிரஸில் நேற்று தான் இணைந்தார் அதற்குள் 2016ம் ஆண்டின் முதல்வர் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை திறந்து விட்டார்கள்.
[ Friday, 28-11-2014 05:32:57 GMT ]
சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் அதிக கோலடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி.
[ Thursday, 27-11-2014 10:55:16 GMT ]
பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
[ Thursday, 27-11-2014 07:59:18 GMT ]
லிங்கா படம் சமீபத்தில் தான் சென்ஸார் சென்று யு சான்றிதழ் பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,