மேற்படி இரு படகுகளும் இன்று இரவு 8.30 மணிக்கு பின்னர் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கரை ஒதுங்கிய இழுவைப்படகு பறையுள்ள பகுதியில் சிக்கியுள்ளது. தற்போது குறித்த பகுதியில் நீர்வற்றியுள்ளதால் அதனை வெளியில் எடுப்பது பெரும் சிரமம் நிறைந்த ஒன்றாக உள்ளது.
இதன் காரணமாக குறித்த இழுவைப்படகை வெளியில் இழுப்பதற்கு இந்திய இழுவைப் படகுகள் இரண்டு வந்து இழுத்துச் செல்வதற்கு கடற்படை அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன், செயலிழந்த படகிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஏழு பேரும் கடற்படையினரின் கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.