செய்தி
வரலாறு அவனை பதிவுசெய்யும்! - ச.ச.முத்து
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 11:46.22 PM GMT ]
27ம்திகதி அதிகாலை. விடிந்தும் விடியாத ஒரு இருள்கலையாத பொழுதில் தொலைபேசி அழைப்பொன்று. இப்படியான பொழுதில் வருவது இரண்டு அழைப்புகள்தான். உயிரான உறவின் அழைப்பு. அது இல்லை என்றால் உறவொன்றின் உயிர்பிரிந்த அழைப்பு.

மறுமுனையில் நண்பனொருவன். தொலைபேசிக்குள்ளாக வரப்போகும் செய்திக்காக காதுகளையும் இதயத்தையும் தயார்செய்தபடியே கேட்டபோதுதான் அவன் சொன்னான் ‘ரங்கன் இப்ப கொஞ்சநேரத்துக்கு முந்தி போய்விட்டானாம்’. வலிக்க வலிக்க மரணங்களை பார்த்தும் கேட்டும் மரத்துப் போனதாக நம்பிக்கொண்டிருந்த மனது உடையத் தொடங்கியது.

ரங்கன் எத்தகைய உறவாக இருந்தான் என்பதைவிட அவன் தான் நம்பிய இலட்சியத்தின் மீதான நம்பிக்கையையும் அந்த இலட்சியத்துக்காக உறுதியுடன் வழிநடாத்தும் தலைமை மீதான நம்பிக்கையையும் இறுதி வைத்திருந்தானே, அதுதான் அவனுடனான உறவாக இருந்திருக்கும்.

இத்தனைக்கும் ரங்கனின் சொந்தப் பெயர்கூட அவனுடன் பழகிய அனைவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அவன் தனது இயக்கப் பெயருடனேயே பழகினான்.அதனுடாகவே தனது வேலைகளையும் செய்தான்.

பயிற்சிக்காக வரும் புதியவர்களை மதுரையில் ஒரு தங்குமிடத்தில் வைத்திருந்து அதன் பின்னரேயே பலதரப்பட்ட பயிற்சிஎமுகாம்களுக்கும் பிரித்து அனுப்புவார்கள். அப்படியான ஒரு
தங்குமிடத்துக்கு சென்றபோதுதான் ரங்கனை முதன்முதலில் சந்திக்க நேர்ந்தது.

அங்குதான் அவன் குபேரனாக மாறினான். அவனின் இயக்கப்பெயர் குபேரன். அதிலும் ‘சிரிப்புக்குபேரன்’ என்றால்தான் அதிகமானவர்களுக்கு தெரியும்.

3வது பயிற்சி அணியில் பயிற்சி பெற்றபோதே பயிற்சியாளர்களால் சிறந்த வீரனாக இனங்காணப்பட்டு அதன்பின் அதே பயிற்சி முகாமின் 6வது 9வது பயிற்சி அணிகளுக்கு பயிற்சி அளிக்கும் ‘மாஸ்டராகவும்’ விளங்கினான்.

பொன்னம்மானின் அன்புக்கும் அவரின் வியப்புகளுக்கும் ரங்கன் உரியவனாக இருந்தான். அதனால்தான் பொன்னம்மான் தாயகம் திரும்பும்போது ரங்கனும் அவருடன் தாயகம் திரும்புகிறான். தாயகம் வந்ததும் யாழ் அணியில் குபேரனும் ஒருவனாகிறான்.

தளபதி கிட்டுவின் மெயின்பேஸான நம்பர் 3ல் ரங்கனும் உள்வாங்கப்படுகின்றான். அதன்பின் யாழ். கோட்டைமீதான் முற்றுகைப்போரில் முக்கிய பங்காற்றிய நம்பர் 3 முகாம் வீரர்களில் ஒருவனாக ரங்கனும் களமாடுகின்றான்.

அதற்குபின் இந்தியப்படை வருகையின்போது அவர்களுடான சண்டையின்போது பாலா அண்ணை தம்பதிகளின் பாதுகாப்புக்கான முக்கிய வீரர்களில் ஒருவனாகவும் ரங்கன் விளங்குகின்றான்.

அதன்பின் பாலா அண்ணையுடனேயே இந்தியா வந்த ரங்கன் அங்கேயே தங்கிவிடுகின்றான். கேட்டால் ‘அமைப்பை விட்டு தான் விலகிவிட்டதாகவும் துண்டுகொடுத்து விட்டு இங்கு இருப்பதாகவும் சென்னையில் சொல்லிக்கொண்டிருந்தான்.

விலகி வந்துவிட்டதக சொல்லிக்கொண்டே வேறு வேலைகள் செய்துகொண்டிருக்கும் ஒருவனாகவே நினைத்தேன். என்னதான் விலகியதாக சொல்லிக்கொண்டிருந்தாலும் அவனால் தன்னை உருமறைக்க தெரியவில்லை.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி செத்தபோது யாரையாவது பிடித்து தண்டனை வாங்கி கொடுத்தே ஆகவேண்டிய நிர்வாக அழுத்தங்கள் ஆளுவோருக்கும் ஆள்வோரை தாங்கிநிற்கும் காவல்துறைக்கும் உறவுத்துறைக்கும் ஏற்பட்டபோதில் நிறைய கைதுகள் மிகநிறைய மிகமிக நிறைய சித்திரவதைகளும் நடந்தேறின. அவற்றினுடாக கிடைத்த வாக்குமூலங்களை வைத்து வழக்கும் தொடுக்கப்பட்டது.

முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் (இருபதுக்கும் மேற்பட்டோர்)  மரணதண்டனையை நீதிமன்றம் வழங்கியது. புலன்விசாரணையை தலைமை தாங்கி நடாத்திய கார்த்திகேயன் ‘இது வாய்மையின் வெற்றி’ என்று புளகாங்கிதம் அடைந்ததார்.

அப்போது மரணதண்டனை பெற்றவர்களில் ரங்கனும் ஒருவன். ஆனாலும் பின்னர் நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் ரங்கன் விடுதலையானான். ஆனால் இந்த காலத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக ரங்கன் சிறையில் வாடிஇருக்கின்றான்.

அதன்பின்பான ஒரு பொழுதில் லண்டனில் ரங்கனை கண்டபோதும் தமிழீழ விடுதலை மீதான அவனின் பற்றும் உறுதியும் இன்னும் அதிகமாகி இருந்ததையே காணமுடிந்திருந்தது. ஏதாவது ஒரு வேலையாக எந்தநேரமும் அலைந்துகொண்டே இருப்பான்.

முள்ளிவாய்க்கால் எல்லோர் மீதும் எறிந்துவிட்டு போன தாக்கங்கள் ரங்கனிலும் தெரிந்தது. ஆனாலும் அவன் சோர்ந்திருக்கவில்லை. மறுநாளே அங்கிருப்பவர்களுக்கு புனர்வாழ்வுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று வேலை செய்யத் தொடங்கி விட்டான்.

இதுதான் ரங்கன் என்று எந்தவொரு வறையறைக்குள்ளும அடக்கிவிட முடியாத ஒரு உற்சாக மனிதன் அவன்.

இப்போதெல்லாம் அதிகமாக அவனை கோவில்களிலேயே காணமுடிந்தது. அவன் மரணித்த அந்த நாளின் முன்னிரவும்கூட கோவிலுக்கு போய்விட்டு வந்து அதே வேட்டியுடனேயே படுத்திருந்திருக்கிறான். அதிகாலை மாரடைப்பு அவனை பிரித்து விட்டது.அதே வேட்டியுடனேயே அவனின் மரணம் நிகழ்ந்தும் இருக்கிறது.

இறுதி வரைக்கும் தமிழீழ நினைப்புடனேயே வாழ்ந்த ஒருவனாக வரலாறு ரங்கனை பதியும் என்று நம்புகின்றேன்.

ச ச முத்து ilamparavai@hotmail.com


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 18-06-2013, 05:58.08 PM ]
கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிண்ணியாவில் பொதுமக்கள் மற்றும் பொலிசார் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது அங்கு கடும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
[ Tuesday, 18-06-2013, 04:51.14 PM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
[ Tuesday, 18-06-2013, 04:20.39 PM ]
திருமணமான பெண்களின் ஆசிய அழகு ராணி - 2013 போட்டியில் இலங்கையைச் சேர்ந்த நிலங்கா சேனாநாயக்க, இந்த ஆண்டுக்கான ஆசிய சர்வதேச அழகு ராணியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:43.41 PM ]
பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  புத்திக சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 18-06-2013, 02:35.09 PM ]
இலங்கையில் 13-வது அரசியல் சட்டத் திருத்ததை அமுல்படுத்த இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 19:56:16 GMT ]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இவ்வளவு காலமும் அங்கு முகாமிட்டிருந்து தலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக விலக்கி, பாதுகாப்பு பொறுப்புக்களை அந்த நாட்டின் ராணுவத்திடம் ஒப்படைத்தது.  
[ Tuesday, 18-06-2013 13:04:07 GMT ]
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சோலார் மோசடி வழக்கில் பிரபல மலையாள நடிகை சாலு மேனன் சிக்குகிறார்.
[ Tuesday, 18-06-2013 20:33:05 GMT ]
கடவுளின் கருணையால் வெள்ளத்தில் இருந்து மீண்டேன் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்தார்.
[ Tuesday, 18-06-2013 13:20:08 GMT ]
செம்பருத்தியின் பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுப் பொருட்கள் அதிகம் அடங்கியுள்ளதால், உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது.
[ Tuesday, 18-06-2013 13:26:49 GMT ]
கொலிவுட்டில் தனுஷ், பார்வதி ஜோடியாக நடிக்கும் ‘மரியான்’ படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.