செய்தி
ஆயுர்வேத வைத்தியர் வீட்டில் ஆயுத முனையில் துணிகர கொள்ளை! யாழ். நவாலியில் சம்பவம்!
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 09:19.46 AM GMT ]
யாழ்ப்பாணத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் 19 பவுண் நகை மற்றும் 16 ஆயிரம் ரூபா பணம் என்பன ஆயுதமுனையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரினால் அபகரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று மாலை 6. 15 மணியளவில் நவாலி கிழக்கு பிரசாத் வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக உள்ள ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

லியோன் புஸ்பராணி என்ற ஆயுர்வேத பெண் வைத்தியரின் வீட்டிலே இக்கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆயுர்வேத வைத்தியசாலை வெள்ளிக்கிழமைகளில் வழமையாக திறப்பது இல்லை. இதனை அறிந்து கொண்ட இனம் தெரியாத சிலர் மாலை 5.30 மணியளவில் நேற்று முன்தினம் வைத்தியம் செய்ய வந்தோம் மிகுதிப் பணம் தரப்படவில்லை. என்று சொல்லிக்கொண்டு அவ்வீட்டினை அவதானித்ததோடு உறவினர் ஒருவருக்கு வைத்தியம் பார்க்க வரலாமா என ஆயுர்வேத வைத்தியரிடம் கேட்டுச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் மாலை 6.15 மணியளவில் இருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்துடன் வீட்டிற்கு உள்ளே வந்து அம் மருத்துவ பெண்மணியின் கழுத்தில் கத்தியை வைத்து அவர் அணிந்திருந்த நகைகளையும், அவரது வயதான தாயாரிடம் இருந்த நகையையும், வீட்டில் இருந்த 16 ஆயிரம் ரூபா பணத்தினையும் துணிகரமாக திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர்.

இதனைத் தடுக்க முற்பட்ட அவரது கணவரான ஞானம் லியோன் என்பவரையும் அத்திருடர்கள் தாக்கிவிட்டு வீட்டில் இருந்த மின் குமிழ்களையும் அடித்து நொருக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரினால் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 28-04-2015, 06:12.32 AM ]
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய பாரம்பரிய பிரதேசங்களை அங்கீகரிக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் செல்வதற்கு தேசிய அரசாங்கத்தின் தேவை மிக அவசியம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 28-04-2015, 06:01.01 AM ]
நேபாள நாட்டு மக்களுக்கு இதய வலியோடு எழும் மடல் இது. உலகில் ஒரேயொரு இந்து நாடு என்ற பெருமைக்குரிய நேபாள நாட்டில் நடந்த பெரும் துயர் அறிந்து ஈழத் தமிழ் மக்களாகிய நாம் தாளாத வேதனை கொள்கிறோம்.
[ Tuesday, 28-04-2015, 05:54.08 AM ]

நான்கு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

[ Tuesday, 28-04-2015, 05:28.54 AM ]
வெள்ளை வான் கும்பல் தொடர்பில் இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது.
[ Tuesday, 28-04-2015, 05:16.36 AM ]
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவை விடுதலை செய்யுமாறு சிறைச்சாலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 28-04-2015 06:11:46 GMT ]
இந்தோனேஷிய போதைப்பொருள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிக்கு நேற்று சிறையில் திருமணம் நடைபெற்றது.
[ Tuesday, 28-04-2015 06:27:50 GMT ]
நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியே காரணம் என்று பாஜக எம்.பி. சாக்‌ஷி மகாராஜ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 28-04-2015 04:15:06 GMT ]
காயத்திலிருந்து மீண்டுள்ள இர்பான் பதான் மீண்டும் அணிக்கு திரும்புவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
[ Monday, 27-04-2015 15:17:35 GMT ]
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-04-2015 20:06:02 ]
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.