செய்தி
அபிவிருத்தி என்ற பெயரில், எமது பரம்பரைக்கு சொத்து சேர்க்கவில்லை:ஜனாதிபதி மஹிந்த
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 10:44.21 AM GMT ]
அரசு என்ற வகையில் நாம் மேற்கொள்ளும் அனைத்து அபிவிருத்திகளையும் எமது பரம்பரைக்கு சேர்க்கும் சொத்தாக சிலர் கருதுவது தவறாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலச் சந்ததியினரின் மறுமலர்ச்சிக்காகவே நாம் இவ்வளவு தூரம் அபிவிருத்திகளையும் தியாகத்தை முன்னெடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாத்ததும்பறை பிரதேச சபைக்கான 250 இலட்ச ரூபா பெறுமதியுள்ள புதிய நிர்வாகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

இன்றைய இளைய தலைமுறையினர் முன்னேற்றப் பாதையில் செல்ல இது மட்டும் போதாது. கல்வியிலும் முன்னேற வேண்டும். பல்கலைக்கழகம் சென்று பட்டம் பெற்றால் போதாது.

ஒழுக்கமுள்ள கல்வி தேவையாகும். ஆனால் மும்மொழியும் தெரியாத பட்சத்தில் நாட்டின் தேசிய ஒற்றுமை சீர்குலைய முடியும்.

எனவே ஒழுக்கமுள்ள கல்வி போன்று தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் கற்றுக்கொள்ளும் வகையில் தாம் புதிய செயற்பாடுகளைத் திட்டமிட்டு வருகிறோம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.