செய்தி
இலங்கையின் பல பாகங்களிலும் பறக்கும் ஒளிக் கற்கள்! புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம்! மக்கள் அச்சம்
[ புதன்கிழமை, 12 டிசெம்பர் 2012, 04:07.39 PM GMT ]
நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் ஒளிக்கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார்.

கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்களை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருந்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரையில் ஒளிப்பிழப்பினை விமானப்படையினரால் காணமுடியவில்லை. ஏனெனில் ஓளியாக மட்டும் தென்படுவதால் அது விமானப்படையின் ராடர் கருவிகளில் பதிவாகும் வாய்ப்புக்கள் குறைவு.

மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் இது தொடர்பில் அவதானிக்கின்றது.

குறித்த ஒளிப்பிழம்பு ஒரு கோளாக இருக்கலாம் எனவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. எனவே மக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இதேவேளை வியாழன் கோளுக்கு அண்மையில் புதிய கோளொன்று வெடித்துச் சிதறியதில் பறக்கும் கற்கள் எனப்படும் அஸ்டரொய்ட்டுக்கள் அண்டவெளியில் சுற்றுவதாக நாசா தெரிவித்திருந்தது.

இந்த பறக்கும் கற்கள் புவியீர்ப்பின் காரணமாக பூமியில் விழலாம். ஆனால் அவை எவ்வித ஆபத்தினையும் விளைவிக்காது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 14-10-2015, 02:06.56 AM ]
களனியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியரின் மரண இழப்பீட்டை தொழில் ஆணையாளர் அலுவலகம் மோசடி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
[ Wednesday, 14-10-2015, 01:55.13 AM ]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்pய தயா மாஸ்டர் மற்றும் அந்த அமைப்பின் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றிய ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து துரித கதியில் பரிந்துரைகளை முன்வைக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய கோரிக்கை விடுத்துள்ளார்.
[ Wednesday, 14-10-2015, 01:54.03 AM ]
உள்ளக விசாரணை பொறிமுறையில் சர்வதேச நிபுணர்கள் பங்கேற்றால் அதனை உரிய முறையில் நம்பகரமாக முன்னெடுக்க முடியும்.
[ Wednesday, 14-10-2015, 01:47.27 AM ]
ஊர்காவற்றுறைக்கு பிரசாரத்திற்கு சென்ற த.தே. கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உட்பட 22 பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணையில் 3ம், 4ம்  சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
[ Wednesday, 14-10-2015, 01:37.04 AM ]
பிரபல போதைப் பொருள் வர்த்தகர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வெலே சுதா எனப்படும் கம்பல விதானகே சமந்த என்பவர் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
[ Tuesday, 13-10-2015 13:57:50 GMT ]
மலேசிய நாட்டிற்கு சொந்தமான பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஏவுகணை தான் என்பதை நிரூபிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்றை நெதர்லாந்து பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 13-10-2015 13:24:51 GMT ]
திருச்சி அருகே பேய் பிடித்ததாகக் கூறப்பட்ட இளம்பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
[ Tuesday, 13-10-2015 13:35:43 GMT ]
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் யூனிஸ்கான்.
[ Tuesday, 13-10-2015 10:24:55 GMT ]
பலருக்கும் உள்ள தயக்கம் தினமும் முட்டை சாப்பிடலாமா என்பது தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 13-10-2015 12:05:13 ]
யார் இந்த அரசியல் கைதிகள்? தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா?