செய்தி
 Photo
மிருகங்களை விட கேவலமாக நடத்தும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள்: சிறீதரன் எம்பியிடம் கண்ணீர் மல்கிய மருதநகர் மக்கள்!
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 08:27.42 AM GMT ]
நிம்மதியாக வாழ ஒரு துண்டு காணியும், அரை நிரந்தர வீடும் கேட்டதற்காக ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தம்மை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்துவதாக பன்னங்கண்டி மக்கள் கண்ணீர் மல்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனிடம் கூறியுள்ளனர்.

கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பன்னங்கண்டி- மருதநகர் கிராமத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை நிரந்தரமாக ஒரு காணியும், வீடும் இல்லாத நிலையில், வயல் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போதும் 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.

அங்கு அவர்கள் தொடந்து தெரிவிக்கையில்,

ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் காணி பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி தமது அரசியற் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். புதிய கட்டிடங்கள் திறப்பதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் காணி கொடுப்பதற்கான பதிவு என்ற பெயரில் பேருந்துகளில் அழைத்துச் சென்றுவிட்டு அவர்களின் தேவைகள் முடிந்தவுடன் கைவிட்டு விடுகிறார்கள்.

இறுதியில் காணியும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் நடந்து ஊர் திரும்புகின்றோம். இதுவே கடந்த 3வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு அரைநிரந்தர வீடு கொடுங்கள் எனக் கேட்டால் பிரதேச செயலர் கேட்கிறார் ஏன் உங்களுக்கு கணவன்மார் இல்லையா? அவர்கள் எங்கே என்று?

அதுபோதாதென்று கதைக்கப்பேச தெரியாதவர்கள் என்றும், யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்றும் உங்களுக்கு தெரியாது என்றும் மிகவும் கேவலமான முறையில் மக்களுக்கு மத்தியில் வைத்து திட்டியனுப்புகின்றார்.

இந்த நிலையில் ஒரு வீடு கேட்டதற்காக மிருகங்களை விடயும் மோசமாக நடத்தப்படுகின்றோம். அரசியல் வாதிகளும் அவ்வாறே நடந்து கொள்கின்றார்கள்,  காணி கேட்டால் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் டோக்கன் தருகிறார்கள். 15 நாட்களில் வீடு தருகிறோம் என்கிறார்கள். ஆனால் இன்றுவரை 3 வருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றத்தின்போது கொடுத்த தறப்பாள் கூடாரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் யாரிடம் செல்வது, எமது வேதனைகளை தீர்க்க என்ன வழி உள்ளது என்று தெரியாமல் கடும் மழை, சேறு, சகதிகளுக்குள்ளும் வெயிலுக்குள்ளும் வருடத்துக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்து கொண்டு விலங்குகளிலும் பார்க்க மோசமான நிலையில் வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் குறித்து தம்மால் முடிந்த உதவிகளை மிகவிரைவில் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 02-08-2015, 09:53.42 PM ]
விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக முன்னாள் ஜனாதிபதி முன்னர் குறிப்பிட்டார்..... 2009 மே 16இல் ஆயுதங்களை மெளனிப்பதாக விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்கள்..... இப்படியாக இருவேறு அறிவிப்புக்கள் வெளிவந்த நிலையில் தென்னிலங்கையில் குழப்பமா....?
[ Sunday, 02-08-2015, 04:21.39 PM ]
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தலி;ல் தமக்கு நம்பிக்கையில்லை என்று நாடு கடந்த தமிழீழ பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015, 04:08.39 PM ]
வியாங்கொட பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
[ Sunday, 02-08-2015, 03:59.31 PM ]
தமிழ் மக்களுக்கு இன ரீதியான பிரச்சினை இருக்கின்றது அவர்களுக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் விழிப்பாக செயற்பட்டுக் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் செல்லக் கூடாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015, 02:51.09 PM ]
யாழ் பல்கலைக்கழகத்தின் கௌரவம் மிகவும் முக்கி;யமானது. அது பாதுகாக்கப்பட வேண்டுமானால், பல்கலைக்கழக மாணவர்கள் நீதிமன்ற குற்றக் கூண்டில் நிற்கக் கூடாது என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார்.
[ Sunday, 02-08-2015 12:26:20 GMT ]
அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் காட்டு விலங்குகளை வேட்டையாடிய புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Sunday, 02-08-2015 13:35:25 GMT ]
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
[ Sunday, 02-08-2015 13:11:18 GMT ]
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய மோசமான செயல்பாடு வருத்தமளிப்பதாக டி20 அணித்தலைவர் மலிங்கா கவலை தெரிவித்துள்ளார்.
[ Sunday, 02-08-2015 14:59:10 GMT ]
இரும்பு சத்துக்கள் அதிகம் உள்ள கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் வலுப்பெறும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 02-08-2015 02:48:24 ]
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது.