செய்தி
அமெரிக்கர்கள் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டால் சீனாவுடன் இணைந்து பதிலடி! தேசிய சுதந்திர முன்னணி
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 09:13.50 AM GMT ]

அமெரிக்கர்களுக்கு இலங்கை வரத் தடையில்லை. ஆனால் உள்நாட்டு விடயங்களில் தலையிட்டு நெருக்கடிகளைக் கொடுக்கக்கூடாது. மீறிச் செயற்பட  முற்பட்'டால் சீனாவுடன் இணைந்து பதிலடி கொடுப்போம் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

புலிகளின் இலக்குகளை இலங்கையில் நிறைவேற்ற அமெரிக்கா கடுமையாக சூழ்ச்சிகளை செய்து வருகின்றது. தொடர்ந்தும் அவ்வாறானதொரு சூழலை இலங்கையில் உருவாக்க இந்நாட்டு மக்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திரமுன்னணியின் பேச்சாளரும் முன்னாள பிரதியமைச்சருமான பியசிறி விஜேநாயக்க கூறுகையில்,

இலங்கையைச் சிதைப்பதே அமெரிக்காவின் திட்டம். இதற்கு இடமளிக்கப் போவதில்லை.

கடந்த பல வருட காலமாக விடுதலைப்புலிகளின் வலையமைப்புடன் இணைந்து இலங்கைக்கு எதிரான நடவடிக்கைளையே அமெரிக்கா தொடர்ந்தும் முன்னெடுத்தது. குறிப்பாக ஐநாவிலும் இலங்கையைத் தலைகுனிய வைக்கவே அமெரிக்கா செயற்பட்டது.

இனிமேலும் இலங்கையை அடிமைப்படுத்தவோ நெருக்கடிகளைக் கொடுக்க முற்பட்டாலோ கடும் நடவடிக்கைகளையே முன்னெடுப்போம்.

சீனாவுடன் இலங்கைக்கு நல்ல நட்புறவு உள்ளது.

எனவே அமெரிக்காவின் சவால்களை சீனாவுடன் இணைந்து இலங்கை முறியடிக்கும். அடுத்த வாரத்தில் இலங்கை வரவுள்ள மூன்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்களும் உள்நாட்டு விடயங்களில் தலையிடக் கூடாது. மீறிச் செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 28-05-2015, 07:11.33 AM ]
விளையாட்டு அமைச்சினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெரும்தொகை கேரம் போட்டுகள், சுதந்திர ஊழியர் சங்க அலுவலகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Thursday, 28-05-2015, 06:54.19 AM ]
கஹவத்தை கொடகதென இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
[ Thursday, 28-05-2015, 06:32.44 AM ]
மண்டூரில் மதிதயன் என்ற அரச உத்தியோகத்தரை நவீனரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கொலையாளிகளை ஒரு வாரகாலத்திற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கிழக்கில் போராட்டங்களை நடாத்தப் போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
[ Thursday, 28-05-2015, 06:07.49 AM ]
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
[ Thursday, 28-05-2015, 05:57.13 AM ]
ராஜபக்சவினரை மிகவும் வன்மமான முறையில் பழிவாங்கி வரும் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான கூட்டணியில் இணைந்து அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.
[ Thursday, 28-05-2015 07:39:13 GMT ]
அமெரிக்காவில் பெற்றோரின் அலட்சியத்தால் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
[ Thursday, 28-05-2015 06:15:18 GMT ]
மைசூரு யதுவம்சத்தின் 27வது மன்னராக யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ உடையாருக்கு இன்று முடிசூட்டுவிழா நடைபெற்றுள்ளது.
[ Thursday, 28-05-2015 06:29:58 GMT ]
இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரிகள் மீது வழக்கு தொடருவதற்கு ஆதாரம் இல்லை என கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
[ Wednesday, 27-05-2015 14:41:38 GMT ]
நரையால் பாதிக்கப்படும்போது ஆண்களும், பெண்களும் தலைக்கு சாயம் பூசுகிறோம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 26-05-2015 20:27:31 ]
ஆட்சி மாற்றத்தின் பின்னர் பல திருப்பு முனைகள், கைதுகள், விசாரணைகள் என்று நடந்திருந்தாலும், நாடு பழமையை, பழைய சிந்தனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகின்றது.