செய்தி
அச்செழு இராணுவ முகாமில் பெண் சிப்பாய்களுக்கிடையில் துப்பாக்கி சூடு!- ஒருவர் படுகாயம்
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 11:51.53 AM GMT ]

யாழ். அச்செழு இராணுவ முகாமில் இராணுவச் பெண் சிப்பாய்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் பெண் இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இருவருக்கும் இடையில் காணப்பட்ட முரண்பாடு காரணமாக ஒருவர் இன்னொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் 511 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 35 வயதுடைய எஸ்.ஜி. சுனேத்ரா என்ற பெண் சிப்பாயே வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் பலாலியில் மிதிவெடியில் சிக்கியது, இராணுவ வாகனம் விபத்து ஆகிய சம்பவங்களுடன் இது இராணுவத்தின் மூன்றாவது விபத்துச் சம்பவம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 01-02-2015, 05:07.02 AM ]
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது இலங்கையில் பல்வேறு தனிப்பட்ட இராணுவப்படைகள் செயற்பட்டமை குறித்து முழுமை விசாரணைகளை நடத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
[ Sunday, 01-02-2015, 04:35.30 AM ]

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமானதென சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு ஜீப் வண்டி ஹலாவத்தை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

[ Sunday, 01-02-2015, 04:06.10 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்த சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[ Sunday, 01-02-2015, 03:53.21 AM ]
வடக்கு, கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய அந்தப் பகுதிகளுக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன விஜயம் செய்யவுள்ளார்.
[ Sunday, 01-02-2015, 03:25.07 AM ]
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், தேர்தல்கள் ஆணையாளராகிய நானோ அல்லது பிரதம நீதியரசரோ அலரி மாளிகையில் இருக்கக் கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Saturday, 31-01-2015 11:49:16 GMT ]
ஐஎஸ் தீவிரவாதிகள் ரசாயன ஆயுத வல்லுநர் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Saturday, 31-01-2015 12:22:55 GMT ]
மலையாள உலகில் கடந்த 16 வருடங்களாக நட்சத்திர தம்பதிகளாக வாழ்ந்து வந்த திலீப்- மஞ்சுவாரியருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.
[ Sunday, 01-02-2015 05:08:48 GMT ]
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் மிரட்டல் பந்துவீச்சால் அவுஸ்திரேலிய அணி திணறி வருகிறது.
[ Saturday, 31-01-2015 13:57:41 GMT ]
பழங்கள் வகைகளிலேயே, முந்திரி பழத்தில் தான் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 31-01-2015 02:33:05 ]
"நீங்கள் எல்லாம் கானலின் நீரோ!! வெறும் காட்சிப் பிழைதானோ - மாகவி பாரதி"- எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருப்பதாகவே தோன்றும். ஆனால் அப்படி இருக்காது.