செய்தி
வட, கிழக்கு மாணவர்களை குறி வைக்கும் நாமல் ராஜபக்ஷ
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40.55 AM GMT ]
வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்துவதற்காக சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது.

இதற்கமைவாக, நான்கு கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை சீன அரசாங்கம் கையளித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் விளையாட்டு உபகரணங்களை அலரி மாளிகையில் இன்று கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய சீன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யுத்தத்தின் பின்னர் பிள்ளைகளின் மனோநிலையை வழமையான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இங்கு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு, கலாசாரத் துறைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனா விளையாட்டுத்துறை பயிற்சிக்காக எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதியளித்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 13-02-2016, 12:26.44 PM ]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைகளில் பிரதான கொள்கையை மீறியமை தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைனுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய வெளிநாடுகளில் உள்ள சிங்களவர்கள் அடங்கிய குழுவொன்று தீர்மானித்துள்ளது.
[ Saturday, 13-02-2016, 12:00.32 PM ]
கொழும்பில் உள்ள முன்னணி தனியார் பெண்கள் முஸ்லிம் சர்வதேச பாடசாலை ஒன்று அங்கு கல்வி கற்றும் வரும் பிள்ளைகளுக்கு அடிப்படைவாதத்தை போதித்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[ Saturday, 13-02-2016, 11:29.41 AM ]
ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை வழக்கு மற்றும் நிதி மோசடி ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்பிலிருந்து தகவல் கசிந்துள்ளது.
[ Saturday, 13-02-2016, 11:21.26 AM ]
மன்னார் மாவட்ட முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகளை மன்னார் மது வரித்திணைக்கள அதிகாரிகள் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
[ Saturday, 13-02-2016, 10:37.30 AM ]
வீட்டுப் பணிப்பெண் தொழில் உட்பட பல்வேறு தொழில்களுக்காக குவைத் நாட்டுக்கு சென்று துயரங்களை அனுபவித்த 104 பேர் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
[ Saturday, 13-02-2016 10:21:28 GMT ]
வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்கள் பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு சர்வாதிகாரியான கிம் யோங்–அன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Saturday, 13-02-2016 07:59:13 GMT ]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானதாக என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016 09:48:25 GMT ]
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் சந்திமால் விளக்கம் அளித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016 12:27:48 GMT ]
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.