செய்தி
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம்! அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்!- இரா.சம்பந்தன்
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 03:37.30 PM GMT ]

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை காலை அவரது இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சமகால நிலவரவம் பற்றி சம்பந்தன் உரையாற்றினார்.

 அவர் தனதுரையில் மேலும் தெரிவித்தாவது:-

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுவது தொடர்பான தற்போதைய இழுபறி நிலை தொடரமுடியாது. விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும் என்பது தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

தமிழரைப் பலவீனப்படுத்தி தமிழ் இனத்தின் இருப்பை அடையாளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் தான இலங்கை அரசாங்கம் காலத்தை கழித்து வருகின்றது.

மனித உரிமை மீறல் தொடருகின்றது. அனைத்துலக சமூகம் எமது நிலை தொடர்பாக தமது முயற்சிகளை கைவிட முடியாது. தொடர்ந்து செயற்பட்டு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் தீவிரமாக செயற்பட வேண்டும்.

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது.

நாட்டின் இறைமையில் தமிழ் மக்களும் பங்காளிகளாக வேண்டும். தற்போதைய அரசமைப்பு முறைமையின் கீழ் அது சாத்தியமற்றதாகும்.

சாதகமான நிலை விரைவில் ஏற்பட்டு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

அடுத்த வாரம் அமெரிக்க அரச உயர்மட்டக்குழு ஒன்று கொழும்பு வரவிருக்கின்றது.

தற்போதைய இலங்கை நிலைவரத்தை அறிந்து 2013 மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இக்குழு சமர்ப்பிக்கும் என்று நம்புகின்றோம்.

அமெரிக்காவும் வேறு நாடுகளும் அறிக்கைகளை சமர்ப்பிக்கவிருப்பதாக அறிகின்றோம்.

அமெரிக்கா, இந்தியா மற்றும் அனைத்துலக சமூகமும் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியே அரசியல் தீர்வு காணும்படி இலங்கை அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்தி வருகின்றது.

இது விடயத்தில் அனைத்துலக அரசுகள் தெளிவாக இருக்கினறன. இதனை உள்வாங்கும் நிலையில் கொழும்பு அரசாங்கம் இல்லை.

சிங்கள மக்களுக்கு எதிராக நாம் செயற்பட முடியாவிட்டாலும் தமிழ் மக்களின் பிறப்புரிமையை எவரும் பறிக்க விடமுடியாது.

அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும். அதிகாரம் நம் கைகளில் இல்லாதபடியால் நாம் இப்போதும் சமமான மக்களாக வாழமுடியாத நிலையில் உள்ளோம்.

நாம் தெளிவாக இருக்க வேண்டும். எதிர்வரும் மாதங்களில் தற்போதைய நிலவரங்களில் மாற்றம் ஏற்படலாம் என்றார் இரா. சம்பந்தன். 

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 03-07-2015, 07:21.38 PM ]
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியவர்கள் என்று இதுவரை 12 000 பேர் புனர்வாழ்வு பெற்று சமூக நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள் என புனர்வாழ்வு அதிகாரி லெப்.கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
[ Friday, 03-07-2015, 06:39.42 PM ]
இலங்கையில் 2009ம் ஆண்டிலும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும் இடம்பெற்ற இனஅழிப்பிற்கு, சிறீலங்கா அரசு பதில் சொல்வது அவசியம் என கனடிய குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் கௌரவ கிறிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
[ Friday, 03-07-2015, 05:01.01 PM ]
மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் தொடர்ந்தும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 03-07-2015, 04:56.10 PM ]
பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டமையை அடுத்து, இன்று மாலை மஹிந்தவும் அவரின் சகாக்களும் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
[ Friday, 03-07-2015, 04:49.36 PM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்துக்கூற ஐக்கிய நாடுகள் சபை மறுத்துள்ளது
[ Friday, 03-07-2015 16:43:41 GMT ]
நேபாள நாட்டின் விவசாய பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட புகாரில் அந்நாட்டு வேளாண்மை மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹர் பிரசாத் பரஜுலி பதவி விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 03-07-2015 12:21:44 GMT ]
விழுப்புரத்தில் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்தவரை நூதனமுறையில் திசை திருப்பி மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 03-07-2015 08:40:24 GMT ]
இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 போட்டியில் சங்கக்காரா விளையாடி வரும் சர்ரே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
[ Friday, 03-07-2015 15:51:35 GMT ]
மகத்துவ மூலிகையான வெற்றிலை பல்வேறு மருத்துவ பயன்களை வழங்குகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 03-07-2015 02:18:27 ]
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் களமிறங்கும் முடிவினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.