செய்தி
 Photo
யாழ்.பல்கலை. மாணவர்களின் கைது நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது!- இராணுவ கிறிஸ்மஸ் நிகழ்வில் யாழ்.ஆயர் தெரிவிப்பு
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 11:38.38 PM GMT ]
யாழ்.பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளும் மாணவர்களின் கைது நடவடிக்கைகளும் கவலையளிப்பதாக யாழ். ஆயர் அதி.வண தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட இராணுவக் கட்டளையகம் ஒழுங்கு செய்த 2012ஆம் ஆண்டிற்கான கிறிஸ்மஸ் கரோல் நிகழ்வின் ஆசியுரையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகம் தற்போது தனது கல்வி சார் சகல செயற்பாடுகளையும் முற்றாக நிறுத்தியுள்ளது மாணவர்களின் கல்வியினை மேலும் பாதிக்கும்.

இந்நிலைமை மேலும் நீடிக்காமல் சம்பந்தப்பட்ட சகலரும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இங்கு இராணுவத்தினர் மற்றும் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அ.ஆனந்தராஜா, யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, இராணுவ உயர் அதிகாரிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 01-07-2015, 11:39.38 AM ]
தேசிய போக்குவரத்து அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டினால் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-07-2015, 11:34.08 AM ]
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் ஏ.லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015, 11:16.38 AM ]
முன்னாள் ஜனாதிபதிகள் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவானால், முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய சலுகைகளும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு உரிய சலுகைகளும் வழங்கப்பட வேண்டும் என சிரேஷ்ட சட்டத்தரணி சந்திரபால குமாரகே தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015, 11:13.47 AM ]
கடந்த வாரங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பின் வடக்கில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதென்று தீர்மானித்ததன்படி, இன்று கிளிநொச்சி அரச செயலகத்தில் உயர்மட்ட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
[ Wednesday, 01-07-2015, 11:09.19 AM ]
மகேஸ்வரி நிதியத்திற்கு எதிராக பாரவூர்திகள் சங்கம் மற்றும் பருத்தித்துறை பிரதேச தலைவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக பல கோணங்களில் முழுவீச்சான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
[ Wednesday, 01-07-2015 08:48:04 GMT ]
ஒளி உமிழும் மர்ம பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 01-07-2015 07:21:10 GMT ]
தருமபுரியை சேர்ந்த இளவரசனின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந்த மாவட்டத்தின் 195 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 01-07-2015 06:14:35 GMT ]
ஜிம்பாப்வே தொடருக்கு அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னணி வீரர் ரஹானேவுக்கு முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 01-07-2015 09:20:30 GMT ]
தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து(Sperm) செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள கருவுடன் (Egg) இணைந்து கரு முட்டை உருவாகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 30-06-2015 16:00:47 ]
ரணில் விக்ரமசிங்க தான் அடுத்த பிரதமராக வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விருப்பம் கொண்டுள்ளதாக கொழும்பில் இருந்து புதிதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.