யாழ்.பல்கலைக் கழக மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் - புத்தாண்டுச் செய்தியில் யாழ் றோயல் இளவரசன்
[ புதன்கிழமை, 02 சனவரி 2013, 08:32.48 PM GMT ]
இந்த புதிய ஆண்டு அனைவருக்கும் சமாதானம் சுபீட்சத்தை சந்தோஷத்தை கொண்டு வரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பற்றியும் யாழ் றோயல் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசன் உயர்திரு றேமியஸ் கனகராஜா தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
நாளை சூரிய அஸ்தமனத்தில் பிறக்கப்போகும் புத்தாண்டை நல்லபடியாக வரவேற்கப்போகும் இந்நிலையில் அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்து, ஏனைய மாணவர்களையும் சரியாக நல்வழிப்படுத்தவேண்டும்.
கைது செய்யப்பட்ட மாணவர்களை தாமதிக்காமல் விடுதலை செய்யப்பட வேண்டும் என சட்ட அதிகாரிகளிடம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாமல் பாதுகாக்கவேண்டியது துணைவேந்தர்களின் கடமை எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
பழைய வரலாற்றைத் திருப்பி உருவாக்காமல், உங்கள் படிப்பில் அக்கறை செலுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடமும், இலங்கைத்தீவில் உள்ள அனைத்து மாணவர்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
சமாதானம் நிலைத்திருக்கும் இலங்கையில் மீண்டும் அச்சமாதானத்தை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு பிரச்சினை எனினும் இருதரப்பினரும் பேசி ஒரு சுமூகநிலைக்கு வரவேண்டும் என தெரிவித்ததோடு, எதையும் உருவாக்குவது எளிதல்ல, ஆனால் அதை அழிப்பது மிக எளிது.
எனவே பிரச்சினை இருக்குமிடத்தில் அவற்றை உடனே பேசித் தீர்வு எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் எல்லோரும் சமமாக வாழ வேண்டும் என இப்புத்தாண்டில் தெரிவித்துக்கொள்வதாக கூறி தன் வாழ்த்தை முடித்துள்ளார்.
இராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியலமைப்பின் 13வது திருத்தம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் மீண்டும் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சைனைட் கடித்து தற்கொலைக்கு முயற்சித்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை விவகாரங்களை உளவு பார்ப்பதற்காகவே கூட்டமைப்பின் வசமுள்ள திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டு அமெரிக்க நிலையமொன்றை அமைத்திருக்கிறது. இது திருகோணமலை துறைமுகத்துக்கும் ஆபத்தான விடயமாகும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல்வீரவன்ச தெரிவித்தார்.
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.