செய்தி
சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்காமல் யாழ். மாணவர்களை விடுதலை செய்யுங்கள்!
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 12:19.06 AM GMT ]

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது. என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது.

தடுத்து வைத்துள்ள  யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் அதிகாரம் வாய்ந்தோர் விடுவிப்பதன் மூலம் சர்வதேச சமுதாயத்திற்கு மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை சுமத்த இடமில்லாமல் செய்யமுடியும்.

இந்த மாணவர்கள் ஆயுதங்களை வைத்திருக்கவும் இல்லை. அவர்கள் முன்னர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கவும் இல்லை.

எனவே, இவர்களை விடுதலை செய்து பல்கலைக்கழகங்களை இயங்க வழிசெய்ய வேண்டும். என்று அந்த சம்மேளனத்தின் பேச்சாளர் டாக்டர் மஹிந்த மென்டிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் இலங்கையை கேலிக் கூத்தாக்கி விடக்கூடாது. அரசாங்கம் மக்களின் உரிமைகளை மீறுகின்றது. என சர்வதேச சமூகம் குற்றஞ்சுமத்துவதற்கு இடமளிக்கக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலைமையினால் யாழ்ப்பாண மக்களும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் பயப்பீதியில் உள்ளனர்.

இவர்கள் கெடுபிடிகளுக்கு முகம்கொடுத்து கொண்டிருக்கின்றனர். எழுந்தமானமாக கைதுகள் இடம்பெறும் போது அங்கு வழமையான நிலைமை இருக்கமுடியாது.

கடந்த நவம்பரில் மோதல் ஏற்பட்டதிலிருந்து பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் பல்கலைகழக மாணவர்கள் பலரை விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 50 பேர் வரையில் யாழ்ப்பாணத்தில் கைதாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினர் யாழ்ப்பாண மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 29-08-2014, 04:18.57 AM ]
காத்தான்குடியில் மக்களுக்கு தொல்லை கொடுத்துவரும் குரங்குகளை சுட்டுக் கொல்வது இந்தப் பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வாகாது என இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரங்கினங்களை ஆராயும் நிபுணர் சுனில் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.
[ Friday, 29-08-2014, 03:52.34 AM ]
இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 29-08-2014, 03:41.42 AM ]
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மீது தாக்குதல் நடத்திய இலங்கையின் கடற்படை வீரர் விஜித ரோஹன இன்று சாஸ்திரக்காரராக செயற்பட்டு வருகிறார்.
[ Friday, 29-08-2014, 03:20.39 AM ]
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்களைப் பெறாமல் மேற்கொள்ளப்பட்டு வந்த பெறுமதி மிக்க கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண அமைச்சர் பொ.ஐங்கரநேசன் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
[ Friday, 29-08-2014, 02:58.39 AM ]

அவுஸ்திரேலியா, சிட்னியில் 31வயதான இலங்கை பெண் வாவி ஒன்றில் மூழ்கி மரணமாகியுள்ளார்.

[ Friday, 29-08-2014 04:28:40 GMT ]
சிரிய நாட்டைச் சேர்ந்த 250 இராணுவ வீரர்களை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்  வெளியாகியுள்ளது.
[ Thursday, 28-08-2014 14:03:23 GMT ]
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் செப்டம்பர் 20ல் தீர்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Friday, 29-08-2014 03:34:14 GMT ]
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்தது உண்மையிலேயே சிறப்பான விடயம் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
[ Thursday, 28-08-2014 12:51:53 GMT ]
பெண்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறார்களோ இல்லையோ, தங்களின் அழகில் தனிக்கவனம் செலுத்துவார்கள்.
[ Thursday, 28-08-2014 18:00:02 GMT ]
ரஜினி, கமல் இருவரும் தான் தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத தூண்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 28-08-2014 16:43:04 ] []
மன்னாரில் மிக முக்கிய மீன்பிடித்தளங்களில் ஒன்றான சவுத்பார் என்ற மீன்பிடித்துறை தென் பகுதி மீனவர்களுக்கான ஒரு துறையாக மாற்றும் முயற்சி தீவிரமடைந்திருக்கிறது.