செய்தி
இலங்கையில் நாடாளுமன்றம்தான் அனைத்திலும் உயர்ந்தது என்பதை ஏற்க முடியாது!– அனுரகுமார திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:42.15 AM GMT ]
இலங்கையில் நாடாளுமன்ற செயல்பாடுகளே கேலிக்கூத்தாக இருக்கும் போது, நாடாளுமன்றம் தான் அனைத்திலும் உயர்ந்தது என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது எனவும், நாடாளுமன்ற வழிமுறைகள் இலங்கையில் மதிக்கப்படுவது இல்லை எனவும்  ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

பிரதம நீதியரசரைத் தேடிச் சென்று வேட்டையாடும் ஓர் அணுகுமுறையை இந்த அரசாங்கம் பின்பற்றி வருவதாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பிரேரணை சமர்ப்பிப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை ஆகிய அனைத்து நடவடிக்கைகளையும் ஜே.வி.பி. முற்று முழுதாக நிராகரிக்கின்றது.

பிரதம நீதியரசர் நீதிமன்றத்தை எதிர்நோக்காமால் அவரை பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு அரசு முயற்சி செய்து வருகிறது என்றும், பிரதம நீதியசருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற அரசாங்கத்திற்கு ஜே.வி.பி ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 29-07-2015, 09:09.58 AM ]
கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஒருவரை பொல்லால் தாக்கி மரணிப்பதற்கு காரணமாக இருந்த ஒருவருக்கு ஐந்து வருடம் சிறைதண்டனை விதித்து திருகோணமலை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
[ Wednesday, 29-07-2015, 08:37.02 AM ]
60 சதவீதமான வேட்பாளர்களே இதுவரையில் தமது சொத்து விபரங்களை சமர்ப்பித்திருக்கின்ற நிலையில், எஞ்சிய வேட்பாளர்கள் நாளைய தினத்திற்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 29-07-2015, 08:29.31 AM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் களுத்துறை மாவட்ட பிரதான பேரிணியில் தான் கலந்துகொள்ள போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 29-07-2015, 08:20.53 AM ]
எதிர்காலத்திற்கு உத்தரவாதம் என மகுடம் சூட்டப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்னணியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 29-07-2015, 08:09.53 AM ]
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் தீர்வு பெற்றுத் தருமாறு சிங்கள் ராவய அமைப்பினால் பொலிஸ் அதிகாரியிடம் இன்று முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
[ Wednesday, 29-07-2015 06:27:36 GMT ]
விமானத்தின் காக்பிட் அறைக்குள் ஆபாச பட நடிகையுடன் இணைந்து விமானி ஒருவர் மது அருந்தி உற்சாகத்தில் திளைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 29-07-2015 06:35:25 GMT ]
பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பேருந்து ஓட்டுனர் ஒருவரின் வீரச் செயலால் 75 பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
[ Wednesday, 29-07-2015 07:21:39 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர்கான் தனது துல்லியமான பந்துவீச்சால் எதிரணியை மிரட்டியவர்.
[ Wednesday, 29-07-2015 06:56:16 GMT ]
அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 27-07-2015 08:51:57 ] []
முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம்.