செய்தி
 Photo
இலங்கைக் கடல் பகுதியிலும் மீன்பிடிக்கக் கோரி தொடரும் தமிழக மீனவர்களின் வேலைநிறுத்தம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:03.31 AM GMT ]
நாகையில் கரையில் நிறுத்தப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகளின் ஒரு பகுதி.மீன்பிடித் தொழிலுக்கு எல்லைக் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை வட்ட விசைப்படகு மீனவர்கள் 4வது நாளாக புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கை பகுதிக்குச் செல்வதால் அசாதாரண சூழல் ஏற்படுகிறது, எந்தக் காரணத்துக்காகவும் தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லையைத் தாண்டக் கூடாது எனவும் மீன்வளத் துறை மூலம் மீனவர்களுக்கு அண்மையில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 30ஆம் தேதி நாகை வட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை அக்கரைப்பேட்டையில் நடைபெற்றது.

இதில் இலங்கைக் கடல் எல்லையிலும் தமிழக மீன்பிடி விசைப் படகுகளுக்கு மீன்பிடி உரிமை வழங்க வேண்டும். இது தொடர்பாக இந்தியா, இலங்கை மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு, ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நாகை வட்ட மீனவப் பஞ்சாயத்துக்குள்பட்ட 8 மீனவக் கிராமங்களையும் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, கடந்த டிசம்பர் 30ஆம் தேதியிலிருந்து தொடங்கிய வேலை நிறுத்தத்தால் சுமார் 600-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.

பைபர் படகு மூலமான மீன்பிடித் தொழில் தினத் தொழிலாக (இரவு தங்காமல்) நடைபெறுவதால், உள்நாட்டு உணவுத் தேவைக்கான மீன் தேவையில் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை.

இருப்பினும், மீன் ஏற்றுமதி மற்றும் அதைச் சார்ந்த ஐஸ் கட்டி உற்பத்தித் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 19-06-2013, 03:28.23 PM ]
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 03:21.27 PM ]
விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
[ Wednesday, 19-06-2013, 02:17.10 PM ]
அவுஸ்திரேலியாவில் இயங்கும் விடுதலைப் புலிகளின்  ஆதரவு அமைப்புகளை தடைசெய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் ஜுலியா கில்லார்ட்டிடம், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013, 01:49.58 PM ]
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று ஐம்பது லட்சம் ரூபாய்களை வட மாகாண சபை ஊடாக கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கியிருந்தது. 
[ Wednesday, 19-06-2013, 12:48.51 PM ]

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தர்மரட்ணம் சிவராமைக் கடத்திய நபர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என ஆட்டோ சாரதி ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

[ Wednesday, 19-06-2013 15:08:14 GMT ]
நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அங்குள்ள கிராமத்தினர் மீது தாக்குதல் நடத்தி ஆடுமாடுகளை கொள்ளையடித்து செல்வது வழக்கம்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 08:00:12 GMT ]
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சாளர்கள் பட்டியலை ஐ.சி.சி துபாயில் வெளியிட்டது.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 10:14:55 GMT ]
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நயன்தாராவின் மவுசு கூடிவிட்டது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.