செய்தி
மூன்று தமிழ் பெண்கள் மீது காடையர்கள் பாலியல் பலாத்காரம்! திருக்கோவிலில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:34.17 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் மூன்று தமிழ்ப் பெண்கள் மீது  காமவெறி பிடித்த  காடையர் கூட்டமொன்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திருக்கோவில் மகாசக்தி கிராமத்தைச் சேர்ந்த இந்த மூன்று பெண்களும் வட்டமடு பிரதேசத்தில் வயல் வேலைகளில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த நான்கு காடையர்கள் அவர்களைப் பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர்.

இதன்போது அந்தக் காமுகக் கயவர்களுடன் போராடிக் கொண்டிருந்த அந்த மூன்று பெண்களும் கூக்குரலிடவே பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்ததனைக் கண்ணுற்ற நான்கு காமுகர்களும் தலைமறைவாகி விட்டனர்.

இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்ட மூன்று பெண்களும் தப்பியோடி நகருக்குள் வந்துள்ளனர்.

இருப்பினும் கயவர்களுடன் அவர்கள் போராடியதால் காயமுற்ற நிலையில் முதலில் திருக்கோவில் வைத்தியசாலையில் மூவரும் அனுமதிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம் இப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 09-02-2016, 05:12.54 AM ]
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயத் ரா அத் அல் ஹூசைனிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
[ Tuesday, 09-02-2016, 05:00.25 AM ]
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
[ Tuesday, 09-02-2016, 04:33.46 AM ]
முள்ளியவளை புதரிகுடாவில் தனியார் காணிகளில் வசித்துவந்த 25 குடும்பங்களுக்கு முள்ளியவளை கயட்டை என்னும் சுடுகாட்டு வளாகத்தை அன்மித்த காடுகளில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 09-02-2016, 04:17.11 AM ]
கடந்த கால பருவத்தின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினால் 400 கோடி ரூபாய் நஷ்டம் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
[ Tuesday, 09-02-2016, 03:49.44 AM ]
பிரதான புகையிரத பாதைகளினூடான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Tuesday, 09-02-2016 00:27:48 GMT ]
எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 08-02-2016 15:00:07 GMT ]
திருமணத்தின் போது மேடையில் மாயமாய் மறைந்து மீண்டும் தோன்றிய மணமக்களின் செய்கையால் உறவினர்கள் ஆச்சரியமடைந்தனர்.
[ Monday, 08-02-2016 11:50:09 GMT ]
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.
[ Monday, 08-02-2016 14:20:32 GMT ]
காலையில் எழுந்தவுடன் டீ, காபி குடிப்பதை எல்லோரும் வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 09-02-2016 01:15:22 ]
சர்வதேச மனித உரிமை முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பு வந்து ஹக்கீமை சந்தித்த போது, ஹக்கீம் உண்மைகளை மறைத்து இங்கு தமிழர்களுக்கு அநீதி நடக்கவில்லை, வடக்கில் படைகள் முகாம்களுக்குள்தான் இருக்கின்றார்கள், அழைத்தால் மட்டும்தான் வருகின்றார்கள் என்று மஹிந்த சார்பாக சான்றிதல் கொடுத்தார்.