செய்தி
(2ம் இணைப்பு)
 
ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை: மேன்முறையீட்டு நீதிமன்றம்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 06:38.26 AM GMT ]

ஒருவரின் குற்றத்தை ஆராய்வதற்கு நாடாளுமன்றத் நிலையியற் கட்டளைக்கு அதிகாரமில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகளை ரத்து செய்யுமாறு கோரி, பிரதம நீதியரசர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கைக்கு வலுவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசரின் மனு எதிர்வரும் 15ம் திகதி விசாரைணக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது: மேன்முறையீட்டு நீதிமன்றம்

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நாடாளுமன்றம் விசாரணை செய்ய முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் விசாரணை நடத்த முடியுமா என உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றிடம் அரசியலமைப்பு விளக்கம் கோரியிருந்தது.

அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு விசாரணை செய்யும் தகுதி கிடையாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 07-07-2015, 12:30.55 AM ]
ஒரு கட்சியின் சார்பில் வேறு கட்சிகள் அல்லது சுயாதீனக் குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதும் ஆதரவளிப்பதம் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 12:26.04 AM ]
ஐக்கிய நாடுகளின் யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளியானால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதனை பயன்படுத்தி தனது செல்வாக்கை அதிகரிக்கலாம் என்பதால் அதனை தடுப்பதற்காகவே ஆகஸ்டில் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டதாக அரச வட்டாரங்கள் தெரிவித்ததாக 'ராய்ட்டர்' செய்தி வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 07-07-2015, 12:13.12 AM ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எந்த மாவட்டத்தில் போட்டியிடுவது என்பதில் குழப்பத்தில் உள்ளார். மேலும் தனது மாவட்டமான அம்பாந்தோட்டையில் போட்டியிடுவதற்கு அவர் பெரும் அச்சப்படுகின்றார் என்று ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
[ Tuesday, 07-07-2015, 12:06.33 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு தயாரிக்கும் பணிகள் 95 வீதம் பூர்த்தியாகியுள்ளதாக கட்சியின் முன்னாள் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரெரா தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 07-07-2015, 12:00.07 AM ]
கட்டுநாயக்கா - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக இலத்திரனியல் அட்டையொன்றை (Electronic Tolling Collection)  அறிமுகம் செய்யப்படவுள்ளது.
[ Tuesday, 07-07-2015 00:24:56 GMT ]
லிபியாவில் மிகவும் தாழ்வாக பறந்த போர் விமனத்தில் இருந்து மனிதர் ஒருவர் உயிர் தப்பிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Monday, 06-07-2015 13:47:38 GMT ]
ஈரோட்டில் வயது முதிர்ந்த தம்பதியர், கவனிக்க ஆள் இல்லாததால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
[ Monday, 06-07-2015 17:49:00 GMT ]
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்த 2013ம் ஆண்டு தாக்கினார்.
[ Monday, 06-07-2015 15:31:09 GMT ]
கசப்புத்தன்மை நிறைந்த பாகற்காய் பலவித மருத்துவ பலன்களை கொண்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 05-07-2015 01:45:50 ]
ஏழு மாதங்களுக்கு முன்னர் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்திருக்கிறார்.