செய்தி
லஞ்சம் பெற்றுக்கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு விளக்க மறியல் உத்தரவு
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 02:16.22 AM GMT ]

கனேடிய பிரஜை ஒருவரிடமிருந்து ஐந்து லட்ச ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நீதிமன்றம் விளக்க மறியல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கனேடிய பிரஜையை விடுதலை செய்வதற்கு இந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஐந்து லட்ச ரூபா லஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளனர்.

கனேடிய பிரஜையை விடுதலை செய்வதற்காக நீதிமன்றில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் போலியான தகவல்களை வழங்கியுள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பாளர் சரத்சந்திர சுமனவீர மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் பிரேமரட்ன ஆகியோரே இவ்வாறு லஞ்சம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சந்தேக நபர்களை எதிர்வரும் 16ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குறித்த கனேடிய பிரஜை சிறுமி ஒருவருடன் ஹோட்டலில் இருந்த போது கைது செய்யப்பட்டிருந்தார்.

லஞ்சம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் போதிய சாட்சியங்கள் கிடையாது என நீதிமன்றில் தெரிவித்த காரணத்தினால் கனேடிய பிரஜை விடுதலை செய்யப்பட்டார்.

நீதிமன்றை பிழையாக வழிநடத்தியதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 06:03.35 PM ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Saturday, 25-05-2013, 04:59.11 PM ]
மட்டக்களப்பு நகரின் நுழைவாயில் திட்டமிட்ட முறையில் புத்த சிலை வைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த அனைத்துவழிகளிலும் போராடுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 04:17.00 PM ]
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் நேற்று தீக்குளித்த பிக்கு, இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-05-2013, 02:55.42 PM ]
செங்கலடி – பதுளை வீதயில் மணியபுரம் பிரதேசத்திலுள்ள அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி லொறியில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகளை கரடியனாறு பொலிஸார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
[ Saturday, 25-05-2013, 02:48.45 PM ]
வவுனியா, நெடுங்கேணி, சேனப்பிலவு கிராமத்தில் 7 வயதுடைய பாடசாலை சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ சிப்பாயை காப்பாற்ற முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.
[ Saturday, 25-05-2013 19:02:27 GMT ]
ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் தினம் வருகிற 29-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 12:10:52 GMT ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
[ Saturday, 25-05-2013 14:07:12 GMT ]
பாகிஸ்தான் நடுவர் அசாத் ராப், ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் எந்தெந்த போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என தெரிய வந்துள்ளது.
[ Saturday, 25-05-2013 07:23:30 GMT ]
அப்பிளின் Mac, iOS இயங்குதளங்களிலும் சில இணைய பக்கங்களிலும் பயன்படுத்தப்படும் Evernote அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-05-2013 19:40:13 GMT ]
ஸ்ரீகாந்த், சுனைனா நடிக்கும் நம்பியார் என்ற படத்தில் சந்தானம் இரண்டாவது ஹீரோவாக  நடிக்கின்றார்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.