செய்தி
நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் இடையில் முறுகல் - விரைவில் நீங்கும் என்கிறார் கெஹலிய
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:21.17 PM GMT ]
பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு இல்லை என்ற உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றம் பதிலளிக்கவுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் தொடர்பில் பாராளுமன்றத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் எட்டாம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவிப்பார். அதுவரை நாங்கள் எதுவும் கூற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் பதவி விலக்குவது தொடர்பில் ஒரு முறைமை பின்பற்றப்பட்டு வந்தது. அந்த முறைமை குறித்து தற்போது புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது.

சிலவேளை எட்டாம் திகதிக்கு முன்னரே பாராளுமன்றம் அவசரமாக கூடக்கூடிய சாத்தியம் உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் தற்போதைய நிலைமைகளை பார்க்கும் போது நீதித்துறைக்கும் சட்டவாக்க நிறுவனமான பாராளுமன்றத்துக்கும் இடையில் ஒரு அளவில் முறுகல் நிலை உள்ளது என்பதனை என்னால் மறுக்க முடியாது. ஆனால் இது தற்காலிகமாக மற்றும் இறுதியான சிக்கல் நிலையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 29-03-2015, 05:25.12 AM ]
ரணில் தலைமைத்துவத்தின் கீழ் அமைச்சர் பதவி பெற்றுக்கொள்ளும் அளவு அவ்வளவு மட்டமான நிலையில் நான் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம தெரிவித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 05:09.30 AM ]
பாராளுமன்றத்தை எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி கலைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
[ Sunday, 29-03-2015, 05:07.47 AM ]
ஜேர்­மனி விமான விபத்­திற்கு கார­ண­மான துணை விமா­னியின் முன்னாள் காதலி அவர் குறித்து வெளி­யிட்ட தக­வல்கள் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.
[ Sunday, 29-03-2015, 04:54.57 AM ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளார்.
[ Sunday, 29-03-2015, 04:41.15 AM ]

முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்படவுள்ளமைக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

[ Sunday, 29-03-2015 05:54:38 GMT ]
அமெரிக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தான் வேலைபார்த்த வங்கியை வீடாக மாற்றி வாழ்ந்து வருகிறார்.
[ Saturday, 28-03-2015 13:42:29 GMT ]
இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
[ Sunday, 29-03-2015 03:11:56 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நியூசிலாந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.
[ Sunday, 29-03-2015 05:39:52 GMT ]
தொழில்நுட்ப உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸிற்கு நிகராக சோனி நிறுவனம் SmartEyeglass எனும் சானத்தை உருவாக்கியுள்ளமை அறிந்ததே.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 03:29:46 ]
முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகா ஒருவழியாக கடந்த வாரம் பீல்ட் மார்ஷல் என்ற பதவி நிலையைப் பெற்றுக்கொண்டு விட்டார்.