செய்தி
ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம்: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 01:30.18 PM GMT ]

சவூதி அரேபியாவில் குழந்தையொன்றை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உள்ளதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் சவூதி அரேபிய தூதுவருக்கும் இடையே இன்று முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பாக சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதிற்கு கருணைமனுவொன்றை அனுப்பி வைத்திருந்தார்.

இக்கருணை மனு தற்போது ரிஸானாவின் விடுதலைக்கு சாதகமான முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரிஸானா விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உண்டு.

சவூதியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர்களுடனான சமாதான முயற்சிகள் பலனிளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சவூதி மன்னரின் வேண்டுகோளின்படி ரியாத் ஆளுநர் சல்மான் ஏற்கெனவே உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டு, ரிஸானா நபீக்கின் விடுதலை குறித்து பேச்சுவாரத்தை நடத்தியதாக சவூதி அரேபிய தூதுவர் தெரிவித்துள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 22-05-2013, 04:14.38 PM ]
பிரான்ஸின் கடற்படைக் கப்பல் 'ஜாக்குஸ் கார்டியர்"  இன்று புதன்கிழமை பிரான்ஸ் நாட்டுக்  கடற்படையினர் 53 பேருடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
[ Wednesday, 22-05-2013, 03:54.36 PM ]

போர்க் குற்றவாளியும் தற்போதைய வடமாகாண ஆளுநருமான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, இணைய ஊடகவியலாளர்களை பிச்சை எடுப்பவர்கள் என்று மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தி திட்டியுள்ளமையானது குடாநாட்டு ஊடகவியலாளர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

[ Wednesday, 22-05-2013, 03:39.55 PM ]

அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து  கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த  இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Wednesday, 22-05-2013, 03:23.32 PM ]

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

[ Wednesday, 22-05-2013, 03:17.41 PM ]

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் தேவைக்காக சில காணிகள் இனங்காணப்பட்டுள்ளன. இராணுவம் பொறுப்பேற்கவுள்ளதாக கூறப்படும் காணிகளின் அளவை சிலர் வேண்டுமென்றே அதிகரித்துச் சொல்வதாக யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.

[ Wednesday, 22-05-2013 14:42:43 GMT ]
சீனப் பிரதமர் இன்று பாகிஸ்தான் வருவதை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு, தலைநகர் இஸ்லாமாபாத்திலும் அருகில் உள்ள ராணுவத்தளமான ராவல்பிண்டியிலும் அனைத்து செல்போன் சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
[ Wednesday, 22-05-2013 11:38:24 GMT ]
சினிமா, கிரிக்கெட்டிற்கு அடுத்தபடியாக அரசியல்வாதியாகவும் வலம் வரவிருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.
[ Wednesday, 22-05-2013 14:42:16 GMT ]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
[ Wednesday, 22-05-2013 07:38:03 GMT ]
கடல் நீரில் இருந்து யுரேனியம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
[ Wednesday, 22-05-2013 11:53:12 GMT ]
கமல்ஹசான் தயாரித்து இயக்கி நாயகனாக நடித்த ‘விஸ்வரூபம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Wednesday, 22-05-2013 00:33:43 ]
கடந்த 18 மாதங்களாக, ஐரோப்பிய ஒன்றிய ஈரோ வலயத்திலுள்ள 17 நாடுகளின் பொருளாதார நிலைமை வளர்ச்சி குன்றி தேக்கமடைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கம், உலகப் பொருளாதார நிதிக் கட்டமைப்பில் வெடிப்புக்களையும் பின்னடைவையும் உருவாக்குகிறது.