செய்தி
 Photo
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலையடிவேம்பு இந்துமாமன்றம் உதவி
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 03:10.59 PM GMT ]
அம்பாறை ஆலையடிவேம்பு இந்து மாமன்றம், ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வியாபார நிலையங்கள் போன்றவற்றில் சேகரித்த பொருட்களை மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விநியோகிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பிருமான சீ.யோகேஸ்வரனிடம் கையளித்திருந்தனர்.

அந்தவகையில் 300 குடும்பங்களுக்கு அசிரி, சீனி, பருப்பு, சோயாமீற், தேங்காய், சவர்க்காரம் உட்பட்ட உணவுப் பொதிகள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சித்தாண்டி-01 கிராம மக்களுக்கு  பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில், பேரவையின் அனர்த்த முகாமைத்துவ குழு நேரடியாக அக்கிரமத்துக்கு சென்று உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர். கிராம அதிகாரி இதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.

இக்கிராமத்தில் வாழும் 800 குடும்பங்கள் உள்ள நிலையில் மேலதிகமாக 500 குடும்பங்களுக்கு அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும்,வறியவர்களுக்குமான அமைப்பின் (Now-Wow) நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையால் உலர் உணவுகள் முன்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்உதவியை புரிந்த அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்துக்கும், ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கும், வியாபார நிலையங்களுக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையும், மட்டக்களப்பு சித்தாண்டி மக்களும் நன்றியை தெரிவிக்கின்றனர்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-05-2013, 02:39.52 AM ]
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
[ Saturday, 25-05-2013, 02:20.52 AM ]
தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கா செய்து கொண்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
[ Saturday, 25-05-2013, 02:18.47 AM ]

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டிற்காக மேலதிகமாக செலவிடப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

[ Saturday, 25-05-2013, 02:14.38 AM ]

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

[ Saturday, 25-05-2013, 12:00.24 AM ]
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற மேலும் 16 இலங்கையர்கள் நேற்று வெள்ளிக்கிழமை அந்நாட்டு அரசாங்கத்தினால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
[ Saturday, 25-05-2013 02:52:27 GMT ]
ஆவி நடமாட்டம் காரணமாக ஜப்பான் பிரதமர் தனக்கென ஒதுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிக்கு செல்லவில்லை என பரபரப்பாக பேசப்பட்டது.
[ Saturday, 25-05-2013 02:32:15 GMT ]
வனத்துறை அதிகாரிகளை தாக்கியது தொடர்பான வழக்கில் மலையாள நடிகர் கலாபவன் மணி பொலிசில் சரணடைந்தார்.
[ Saturday, 25-05-2013 03:15:09 GMT ]
சூதாட்ட வழக்கில் சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனை மும்பை பொலிசார் கைது செய்தனர்.
[ Saturday, 25-05-2013 03:00:31 GMT ]
கணினியின் வருகையைத் தொடர்ந்து அறிமுகமான USB தொழில்நுட்பம் தற்போது மிக வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
[ Saturday, 25-05-2013 03:21:28 GMT ]
மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.