செய்தி
வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு
[ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 07:14.13 PM GMT ]
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட வைத்தியர் சிவசங்கரை தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காலில் வைத்து விசாரணைக்குட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.

கடந்த 29ம் திகதி படையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த வைத்தியர் 6மணித்தியாலம் இராணுவத்தினரின் விசாரணையின் பின்னர் மாங்குளம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதன்பின்னர் 4நாட்கள் பொலிஸாரின் கடுமையான விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் ஆஜர்செய்யப்படுவார் என நம்பப்பட்டது. எனினும் விசாரணைகள் நிறைவடையவில்லை எனவும், நீதிமன்றிற்க்கு கொண்டுசெல்வதற்கு வாகனவசதி இல்லை எனவும் கூறிய காவற்துறையினர் நீதிமன்றில் ஆஜர்செய்ய முடியாது என கூறியிருந்தனர்.

எனினும் அன்றைய தினமே மாலை இரகசியமான முறையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் முன்னால் வைத்தியரை ஆஜர்படுத்திய காவற்துறையினர் தொடர்ந்தும் 10நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தும் உத்தரவினைப் பெற்றிருக்கின்றனர்.

எனினும் இந்தவிடயம் குறித்து இலங்கை வைத்தியர் சங்கம் பெரியளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 06-03-2015, 10:54.22 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கட்சி உறுப்புரிமையை பாதுகாத்துக் கொள்ள உச்ச நீதிமன்றின் உதவியை நாடியுள்ளார்.
[ Friday, 06-03-2015, 10:32.41 AM ]
இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் ஜே.வி.பி எடுத்த பல நடவடிக்கைகள் மூலம் அதன் நடுநிலைமையை பாதுகாத்து கொள்ள முடியாது போனது என்பதை ஏற்றுக்கொள்வதாக அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 06-03-2015, 10:26.51 AM ]
கண்டி நகரில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்து கொள்ளச் செல்வோர் மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
[ Friday, 06-03-2015, 10:26.36 AM ]
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரேயிடம் கையூட்டல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர்.
[ Friday, 06-03-2015, 10:11.57 AM ]
தேசிய ஒளடதங்கள் சட்ட மூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
[ Friday, 06-03-2015 10:30:22 GMT ]
சிரியாவில் உள்ள அல்கொய்தா அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Friday, 06-03-2015 06:55:08 GMT ]
இந்து சமய புராணங்களில் ஒன்றான கருடபுராணத்தில், ஒருவர் என்ன தவறு செய்கிறார்களே, அதே வடிவில் அவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
[ Friday, 06-03-2015 07:10:20 GMT ]
உலகக் கிண்ணப் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 182 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
[ Friday, 06-03-2015 06:38:24 GMT ]
சில்வர் பாத்திரங்கள், மண்பானைகளை மறந்து விட்டு நாண் ஸ்டிக் பாத்திரத்தை நோக்கி மக்கள் பயணிக்க ஆரம்பித்துவிட்டனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 05-03-2015 08:31:25 ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு நேற்று முன்தினம் 3ந் திகதி வருகை தந்திருந்தார்.