பிரதம நீதியரசருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டதன் மூலம் அரசாங்கம் செய்த பிழையை மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
எனினும் பொறுப்புவாய்ந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலரின் நடவடிக்கைகள் கவலையளிக்கின்றது.
அரசாங்கத்திற்கு சார்பான முறையில் செயற்பட்டு சுயலாபங்களை பெற்றுக் கொள்ளும் முயற்சி அறுவருக்கத் தக்கது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதுல்கோட்டே பிரதேசத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.