மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்மானம் கள்வனின் தாயிடம் மை பார்ப்பது போன்றது: விமல் வீரவன்ச
உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றிடம் சட்ட வரைவிலக்கணம் கோரும் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நீதிமன்றக் கட்டமைப்பை தன்வசப்படுத்தியுள்ளார்.
சுயலாப நோக்கங்களுக்காக நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயற்படுகின்றார்.குற்றவியல் பிரேரணை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரையில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பது பொருத்தமானது.
பிரதம நீதியரசர் நாட்டின் அரசியலமைப்பை உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றார். சர்வதேச சக்திகளை திருப்திபடுத்தும் வகையில் நாட்டுக்கு எதிராக பிரதம நீதியரசர் செயற்பட்டு வருகின்றார்.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் முயற்சியின் ஓர் கட்டமாக பிரதம நீதியரசரின் நடவடிக்கைகளை கருத முடியும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.