அரசியலில் ஈடுபடுவதற்கு பிரதம நீதியரசருக்கு பூரண உரிமை காணப்படுகின்றது. எனினும், நீதவான் சீருடைகளை களைந்து விட்டே அரசியலில் ஈடுபட வேண்டும்.
அண்மைக்காலமாக சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்கள், பிரதம நீதியரசரின் நடவடிக்கைகள் போன்றன இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நாட்டில் குழப்ப நிலைமையை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். கொழும்பில் வாழும் சிலரைத் தவிர ஏனையவர்களுக்கு பிரதம நீதியரசரின் பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லை.
இதேவேளை, கிராம மக்களுக்கு வேறு பல பிரச்சினைகள் காணப்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.