செய்தி
மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவினை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.தே.க
[ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:19.13 AM GMT ]

நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவினை ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவிற்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை நடத்த முடியாது என்ற மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பினை அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

குற்றவியல் பிரேரணை அரசியல் அமைப்பிற்கு முரணானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் சட்ட வரைவிலக்கணத்தை வழங்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு மட்டுமே காணப்படுகின்றது. எனவே நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்ட காரணத்தினால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து விலகிக் கொண்டனர்.

திவிநெகும சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் விசேட உரையாற்றிய சபாநாயகர், நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பில் சட்ட வரைவிலக்கணம் வழங்கக் கூடிய அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு காணப்படுவதாக தெரிவித்திருந்தார்.

எனவே, மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பை சபாநாயகர் ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டுமென லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க தாக்கல் செய்த மனுவை பரிசீலனை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு தொடர்பில் வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 23-05-2013, 04:11.57 PM ]
ரக்பி போட்டி மைதானத்தில் நடுவரைத் தாக்கிய இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் குறித்து  இலங்கை ரக்பி அதிகாரசபை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013, 02:56.38 PM ]
இலங்கையில் தமிழினத்தை அழித்தொழித்த நாள் 2009, மே 18. ஒட்டுமொத்த உலக நாடுகளும் இலங்கையுடன் கைக்கோர்த்து நின்று ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்துவிட்டு தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்ட நாள்.
[ Thursday, 23-05-2013, 02:51.21 PM ]
பேருந்தில் பயணம் செய்த பெண்ணொருவர் மீது தவறாக நடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவரை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் எஸ்.திருச்செந்தில்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
[ Thursday, 23-05-2013, 02:13.57 PM ]

இலங்கையில் கடந்த ஆண்டில் 20 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

[ Thursday, 23-05-2013, 12:35.13 PM ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை வீசியதான குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
[ Thursday, 23-05-2013 18:20:27 GMT ]
ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
[ Thursday, 23-05-2013 11:12:23 GMT ]
தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
[ Thursday, 23-05-2013 14:51:22 GMT ]
ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக வீரர்கள் மற்றும் தரகர்கள் தொடர்ந்து கைதாகி வருகின்றனர்.
[ Thursday, 23-05-2013 06:03:17 GMT ]
கூகுள் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு உலாவிகளின் வரிசையில் முன்னணியில் திகழும் குரோம் உலாவியின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[ Thursday, 23-05-2013 17:03:09 GMT ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 23-05-2013 09:05:45 ] []
திலீபனின் சொந்தப் பெயர் இ.பார்த்தீபன். யாழ்ப்பாணம் ஊரெழுவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திலீபன் பிறந்து ஒரு சில மாதங்களிலேயே தாயைப் பறிகொடுத்திருந்தார். தந்தை ஓர் ஆசிரியர். பெயர் இராசையா.