செய்தி
யாழில் செய்தித்தாள் விநியோகிக்கச் சென்றவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 08:08.35 AM GMT ]

யாழ்.தினக்குரல் செய்தித்தாள் விநியோகஸ்தர் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு சில நாட்களேயாகும் நிலையில், தொடர்ந்தும் பத்திரிகை விநியோகஸ்தர்களை படைப் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

கடந்த 7ம் திகதி பருத்தித்துறை வீதியில் புத்தூர் சந்தியில் வைத்து சி.சிவகுமார் என்ற விநியோகஸ்தர் கடுமையாக தாக்கப்பட்டு தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் நேற்றும், இன்றும் அதிகாலையில் செய்தித்தாள் விநியோகத்திற்குச் சென்ற நபர்களை முழுதாக முகத்தை மறைத்துக் கொண்டு பின்தொடர்ந்த நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடமிருந்து தப்பியோடிய விநியோகஸ்தர்கள் பொதுமக்களின் வீடுகளில் ஒழிந்திருந்து விட்டு அதிகாலையே செய்தித்தாள்களை விநியோகித்துள்ளனர்.

இதேபோல் அதிகாலையில் பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகவும், முகத்தை முழுதாக மறைத்திருந்த நபர்கள் சிலர் வழக்கத்திற்கு மாறாக நடமாடியுள்ளனர்.

எனவே யாழ்.மாவட்டத்தில் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்பது புலனாகின்றது என யாழ் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்..

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 03-08-2015, 08:26.20 AM ]
க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
[ Monday, 03-08-2015, 08:05.08 AM ]
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் பொதுத் தேர்தல் தொடர்பிலான 09 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
[ Monday, 03-08-2015, 07:54.46 AM ]
கொழும்பு பேஸ்லைன் வீதியின் சத்தர்ம மாவத்தை சந்தியில் சந்தேகத்திற்கு இடமான டிபெண்டர் வாகனம் ஒன்றை காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
[ Monday, 03-08-2015, 07:49.05 AM ]
மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கு வராத முதலீட்டாளர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கு அழைத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 03-08-2015, 07:11.18 AM ]
மஹிந்த ராஜபக்ச தலைமையில் மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேரா எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
[ Monday, 03-08-2015 06:30:09 GMT ]
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.
[ Monday, 03-08-2015 06:43:57 GMT ]
சீன மாணவி ஒருவர் தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார்.
[ Monday, 03-08-2015 07:26:41 GMT ]
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
[ Monday, 03-08-2015 08:16:21 GMT ]
உணவு வகைகளை சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு வதக்குவதன் மூலமும் அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 03-08-2015 02:22:26 ]
பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும், இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில், எல்லாக் கட்சிகளுமே தம்மால் இயன்றளவுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டிக் கொள்வதற்கான பிரசார உத்திகளைக் கையாண்டு வருகின்றன. வடக்கு தேர்தல் களத்திலும், பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன.