செய்தி
 Photo
சென்னையில், ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை: 1000 மாணவர்கள் கைது!
[ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 10:25.42 AM GMT ]
 தமிழ் நாடு, சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை துணை தூதரகம், விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் ஒரு வாரத்தைக் கடந்துள்ளது.

இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், சென்னையில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் இருந்து பேரணியாக புறப்பட்ட 300 மாணவர்களை தடுத்து நிறுத்திப் பொலிஸார் கைது செய்தனர்.

10க்கும் மேற்பட்ட பேருந்துகளில் அவர்களை ஏற்றிச் சென்ற பொலிஸார் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் காவலில் வைத்துள்ளனர்.

மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து பேரணியாக சென்று இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற கே.கேந.நகர் மீனாட்சி பொறியியல் கல்லூரி மாணவர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, இலங்கைக்கு எதிராக இந்தியாவே தனித் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை விமான நிலையத்தை பச்சையப்பன் கல்லூரி 500 மாணவர்கள் இன்று முற்றுகையிட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்தால் அனைத்து இடங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் சென்னை பரபரப்புடன் காணப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 13-10-2015, 08:39.14 AM ]
இலங்கையில் நிலத்திலும் கடலிலும் உள்ள கண்ணி வெடிகளை அகற்றும் முயற்சிக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார்.
[ Tuesday, 13-10-2015, 08:30.13 AM ]
கிளிநொச்சி பூநகரி பரமன்கிராய் வெட்டுக்காடு பகுதியில் கடந்த மாதம் 2ம் திகதி நான்கு பேரின் காணிகளை நிலஅளவை செய்து சுவீகரிக்கச் சென்றவர்களை காணி உரிமையாளர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் திருப்பி அனுப்பியிருந்தனர்.
[ Tuesday, 13-10-2015, 08:10.44 AM ]
மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று கிளை காரியாலயம் ஒன்று அமைச்சர் திகாம்பரத்தினால் திறந்து வைக்கப்பட்டது.
[ Tuesday, 13-10-2015, 08:07.11 AM ]
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முக்கிய சாட்சியம் ஒன்று இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில், நீதவான் அறையில் இரகசியமாக பெறப்பட்டுள்ளது.
[ Tuesday, 13-10-2015, 07:55.32 AM ]

இராமேஸ்வரம் அருகே உள்ள கடல்பகுதியில் இன்று அதிகாலையில் மர்மமான முறையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

[ Tuesday, 13-10-2015 05:41:40 GMT ]
நெதர்லாந்தில் உயிரியல் ஆசிரியை ஒருவர் தனது மாணவர்களுக்கு வினோதமான முறையில் பாடம் எடுத்து அசத்தியுள்ளார்.
[ Tuesday, 13-10-2015 06:35:23 GMT ]
தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தனது காலில் வயதில் மூத்த பெண்கள் விழுந்தபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தார் என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.
[ Tuesday, 13-10-2015 06:58:02 GMT ]
கிரிக்கெட் போட்டிகளில் எதிரணி இலக்கை எட்டும் போது சில ஆட்டங்களில் திரில் முடிகள் கிடைக்கும்.
[ Tuesday, 13-10-2015 07:29:00 GMT ]
சிலரது முகம் பார்ப்பதற்கு பளிச்சென்று வெள்ளை நிறமாக இருக்கும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 12-10-2015 00:55:31 ] []
வடக்கு மக்களின் ஆணையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் நிலைப்பாடு....? ஆபத்தான பயணத்தில் தமிழ் மக்களை எப்படி கையாள்வார்……??