செய்தி
(2ம் இணைப்பு)
 
அமெரிக்க பிரேரணை நியாயமற்றது: உறுப்புரிமை நாடுகளுக்கு இலங்கைத் தூதுவர்கள் ஜெனீவாவில் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 12:05.34 AM GMT ]
ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப் போவதாக கூறியிருக்கும் பிரேரணை நியாயமற்றதென அதன் உறுப்புரிமை நாடுகளுக்கு அங்கிருக்கும் இலங்கைத் தூதுவர்கள் விளக்கமளித்து வருவதாக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இலங்கைகான நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, மனித உரிமைப் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு ஜெனீவா உயர்மட்ட அமர்வின் போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரை தொடர்பிலான மேலதிக விளக்கத்தை அளித்து வருவதாகவும் தெரிய வருகிறது.

மேலும் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் கொன்சுயுலர்களுக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தலைமையில் அண்மையில் நாட்டின் ஆரசியல் நிலவரம், அபிவிருத்தி, நல்லிணக்கச் செயற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இந்த சந்திப்புக்களின் போது ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படும் விதம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கம் அளித்திருந்தார்.

அதேவேளை, ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2ம் இணைப்பு

மோதல் தவிர்ப்பு வலய காணொளி தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு உண்மை விளக்கம் - இலங்கை அரசாங்கம் தெரிவிப்பு

ஜெனீவாவின் மனித உரிமைகள் மாநாட்டில் காண்பிக்கப்பட்ட மோதல் தவிர்ப்பு வலயம் காணொளி தொடர்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கவிருப்பதாக இலங்கையின் வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது ஜெனீவாவில் உள்ள இலங்கையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரிய சிங்க இந்த பணிகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்

இந்த காணொளியில் காண்பிக்கப்பட்ட காட்சிகள் மற்றும் கூறப்பட்ட விடயங்கள் என்பன போலியானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் அதன் உண்மைத் தன்மை தொடர்பில் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மற்றும் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 13-02-2016, 02:30.23 PM ]
இலங்கையில் நடைபெற்ற போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் வெளிநாட்டு நீதிபதிகளை பயன்படுத்துமாறு எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தம் கொடுக்கப்படாது என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016, 01:58.57 PM ]
மதங்களையோ இனங்களையோ அவமதிக்க கூடாது எனவும் அவ்வாறான செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016, 01:44.06 PM ]
வவுனியா பம்பைமடு பகுதியில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக நடத்தப்பட்டுவந்த வைகறை காப்பகத்திலிருந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நோயாளிகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தில் வடக்கு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
[ Saturday, 13-02-2016, 01:20.44 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கட்சித்தலைமைக்கு சவால் விடுத்துள்ளனர்.
[ Saturday, 13-02-2016, 01:14.56 PM ]
இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டமையினை இனவாதிகள் குறிப்பாக மஹிந்த தரப்பினர் இனவாத கண்ணோட்டத்தில் விமர்சித்தார்கள்.
[ Saturday, 13-02-2016 10:21:28 GMT ]
வட கொரியா நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டினர்கள் பொது இடங்களில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு சர்வாதிகாரியான கிம் யோங்–அன் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Saturday, 13-02-2016 07:59:13 GMT ]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானதாக என காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர் குலாம்நபி ஆசாத் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016 09:48:25 GMT ]
இந்திய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இலங்கை அணித்தலைவர் சந்திமால் விளக்கம் அளித்துள்ளார்.
[ Saturday, 13-02-2016 12:27:48 GMT ]
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 11-02-2016 21:53:01 ]
தமிழரின் அரசியலில் ஆளுமைமிக்க தலைமைகளுக்கு எதிராக இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.