செய்தி
சர்வதேச போர்க்குற்றம் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திடப் போவதில்லை: இலங்கை
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 02:01.59 AM GMT ]

சர்வதேச போர்க்குற்றம் குறித்த நீதிமன்றம் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திடப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டுக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடிய எந்தவொரு பிரகடனத்திலும் அரசாங்கம் கைச்சாத்திடாது என தெரிவித்துள்ளது.

தெற்காசியாவின் எந்தவொரு நாடும் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இந்தியா கூட இந்த பிரகடனத்தில் கைச்சாத்திடவில்லை எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்த பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டுமென சிலர் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

சில நாடுகளின் விசேட பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்க அனுமதியளிக்குமாறு மனித உரிமைப் பேரவை மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சில நாடுகள் தங்களுக்கு தேவையான வகையில் விசேட பிரதிநிதிகளை அனுப்பி வைக்கும் யோசனையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் எதிர்வரும் 15ம் திகதி 210 யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளன.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 30-03-2015, 10:23.07 AM ]
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கைக்கு வரபோவதாக அறிவித்துள்ள நிலையில், ராஜபக்ச குடும்பத்தில் பல நெருக்கடிகள் தோன்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 30-03-2015, 10:06.44 AM ]
அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களான 26 பேர் அண்மையில் அமைச்சு பதவிகளை ஏற்றமையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியை சீர்குலைப்பதற்காக திட்டமிட்ட செயற்பாடு என தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Monday, 30-03-2015, 09:57.11 AM ]
புதிய அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போகும் ஆபத்து எற்பட்டுள்ளது.
[ Monday, 30-03-2015, 09:37.59 AM ]

தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.

[ Monday, 30-03-2015, 09:34.05 AM ]
இன்று வெளியான 2014ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லையென முஸ்லிம் மாணவியொருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
[ Monday, 30-03-2015 08:32:46 GMT ]
ஈராக்கை சேர்ந்த நபர் ஒருவர் 301 கிலோவையும் தாண்டி அதிகரித்து கொண்டே செல்வது அந்நாட்டு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
[ Monday, 30-03-2015 06:43:53 GMT ]
அன்பார்ந்த ராசி நேயர்களே உங்களுக்கான இந்த வார ராசிபலன்கள்,
[ Monday, 30-03-2015 07:07:17 GMT ]
2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
[ Monday, 30-03-2015 06:20:48 GMT ]
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசியின்மை எனும் உடல்நலக்கோளாறால் சிக்கித் தவித்து வருகின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 06:35:37 ]
திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை, இலங்கைக்கு வரவழைக்கும் முயற்சி குறித்து, இந்தியன் எக்ஸ்பிரசிடம் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர், யாரோ குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்று பொதுவான கருத்தை கூறியிருந்தார்.