செய்தி
(2ம் இணைப்பு)
Photo
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு? தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ கட்சிகள் இணைந்து தம்மைப் பதிவுசெய்துகொள்ள முடிவு?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 07:36.53 AM GMT ]
தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவு செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மாநாட்டிலே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன.

அவையாவன,

தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்ககூடிய அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவுசெய்யப்படவில்லை.

பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள் சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ)நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்கவேண்டும்.

ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும் எனவும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது.

இந்த முயற்சிகள் வெற்றிபெற முடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு முன்னணியாக பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கூடிய விரைவில் தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் மத்திய குழு வேண்டுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னணியாக பதிவு செய்யப்பட்டதன் பின்னர் அல்லது தனி அரசியல் கட்சியாக பதிவுசெய்யப்பட்டதன் பின்னர் இதில் சேரவிரும்பும் தமிழ் தேசிய இனத்தின் அபிலாஸைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழ் தேசிய இனத்தின் ஒற்றமையை பலப்படுத்தி சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும் என்றும் இந்த மத்திய குழு தீர்மானிக்கின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு? - பிபிசி தமிழோசை

இலங்கையில் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அணியாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனியான அரசியல் கட்சியாக பதிவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி உடன்பட வேண்டும் என்று அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு தமிழ்க் கட்சிகளும் இரண்டு வார காலக்கெடு விதித்துள்ளன.

அடுத்துவரும் இரண்டு வார காலத்துக்குள் ஐந்து கட்சிகளுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், தமிழரசுக் கட்சி தவிர்ந்த நான்கு கட்சிகளும் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பதிவுசெய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

இதுபற்றி தனது தலைமையிலுள்ள டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுவிலும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாகப் பதியவேண்டுமென்று கூட்டணிக் கட்சிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தும் அதற்கு தமிழரசுக் கட்சி உடன்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிஆர்எல்எஃப், புளொட், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய ஐந்துக் கூட்டணிக் கட்சிகளுமே தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இயங்கிவருகின்றன.

ஆனால், புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டக் கட்சியாக தமது கூட்டமைப்பு அமைய வேண்டுமென்று மற்றக்கட்சிகள் சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவந்துள்ளன.

ஒற்றுமையை வலியுறுத்தியே இதுவரை காலமும் தாம் காத்திருந்ததாகவும் ஆனால், எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் தமது கட்சிகளுக்கிடையில் ஒருமித்த கருத்து சாத்தியப்படாவிட்டால் நான்கு கட்சிகள் மட்டும் தனித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெலோ இயக்கத்தின் தலைவர் கூறினார்.

ஏனைய சக கட்சிகளும் இந்த விடயம் தொடர்பில் தமது மத்திய குழுக்களைக் கூட்டி முடிவெடுத்த பின்னர், பதிவு விடயம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

'புரிந்துணர்வுடன் தான் செயற்படுகிறோம்': தமிழரசுக் கட்சிஇதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒரே கட்டமைப்புக்குள் இயங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் தமக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தமிழோசையிடம் கூறினார்.

தமிழர் பிரதேசங்களில் தீவிரமடைந்துகொண்டிருக்கும் இராணுவ நில ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக போராட வேண்டிய நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பங்களை ஏற்படுத்தும் பிரச்சாரங்களுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறினார்.

வட மாகாணசபை தேர்தல் நடந்தால், அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போட்டியிடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் மாவை சேனாதிராஜா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 26-05-2015, 12:51.20 PM ]
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் ஒன்று கூடலும் கடந்த 24ம் திகதி நடைபெற்றது.
[ Tuesday, 26-05-2015, 12:37.50 PM ]
நாட்டில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்றாலும் நாட்டை ஆட்சி செய்வது பிரதமர் ரணில் விக்ரமசிங்க என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 26-05-2015, 12:35.26 PM ]
நீண்ட காலத்துக்கு பின்னர் இன்று காலை மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூகசேவை உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 26-05-2015, 12:32.32 PM ]
கம்பளை கெலிஓயா நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
[ Tuesday, 26-05-2015, 11:52.33 AM ]
கிளிநொச்சி – பளை உடுத்துறை பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற காவற்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
[ Tuesday, 26-05-2015 11:39:48 GMT ]
இயற்கைக்கு எதிரான உறவிற்கு மறுப்பு தெரிவித்த யாசிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவரை ஐ.எஸ் தீவிரவாதி உயிருடன் எரித்து கொன்றுள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
[ Tuesday, 26-05-2015 07:43:16 GMT ]
ஜெயலலிதா தமது ராஜினாமா கடிதத்தை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
[ Tuesday, 26-05-2015 08:08:13 GMT ]
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஒரு அழகான பெண்ணை கமெராக்கள் வட்டமிடத் தொடங்கின.
[ Tuesday, 26-05-2015 11:45:50 GMT ]
பூசணிக்காயில் மறைந்திருக்கும் ஏராளமான சத்துக்கள் உடல் நலத்திற்கு பலவிதமான நன்மைகளைத் தருகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Tuesday, 26-05-2015 11:20:39 ]
ஜனவரி 8ஆம் திகதி வரை முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்ட ஆணவ அதிகார தோரணை, சகோரதத்துவம் ஒற்றுமை, ஊழல் ,கொலை ,கொள்ளை குடும்ப ராஜசுபபோகம், அம்மம்மா ஓர் நாட்டின் தலைவரானால் இப்படியா இவ்வளவுமா என மக்கள் பார்த்துக்கொண்டிருந்த அந்த ராஜபக்சவின் கடந்த காலத்தை நாம் சற்று பின்நோக்கி பார்த்தோமேயானால்,