செய்தி
பொதுநலவாய நாடுகளின் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகளையும் அனுப்பப் போவதில்லை!- கனடா
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 11:51.33 AM GMT ]
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது.

எனினும், மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தப்படவில்லை என கனடா சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்கு முழு அளவிலான பிரதிநிதிகள் குழுவினை அனுப்பி வைக்கப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கனடா தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானிக்கும் என கனேடிய வெளிவிவகார திணைக்களத்தின் எமா வெல்போர்ட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை நிலைமைகள் குறித்து திருப்தி அடைய முடியாத நிலையில் முழு அளவில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகள் பங்கேற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பாரிய யுத்தக் குற்றச் செயல்கள், குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கம் ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கனடா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 28-08-2015, 04:51.14 PM ]
பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள செயற்பாட்டாளர்களுக்கு தேர்தல் பணிகளில் ஈடுபட வாய்ப்பளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
[ Friday, 28-08-2015, 04:40.24 PM ]
நல்லாட்சிக்கான ஐக்கியக் தேசிய முன்னணி மீண்டும் தமது கட்சியின் பெயரை ஜாதிக ஹெல உறுமய என்று மாற்றிக்கொள்ள தேர்தல்கள் ஆணையாளரின் அனுமதியை எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 28-08-2015, 04:28.27 PM ]
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கக் கூடாது என்று கீதா குமாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.
[ Friday, 28-08-2015, 04:15.48 PM ]
உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சி காரணமாக இலங்கையில் எரிபொருள் விற்பனை விலை கணிசமான அளவில் குறைக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
[ Friday, 28-08-2015, 04:00.29 PM ]
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தனது ஆதரவாளர்களை சந்திப்பதற்காக இன்று மாலை அக்கரைப்பற்றுக்கு வருகை தந்துள்ளார்.
[ Friday, 28-08-2015 15:41:58 GMT ]
சீனாவில் ஹொட்டல் ஊழியர் மீது புகார் கூறிய இளம்பெண்ணின் மீது வெந்நீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 28-08-2015 13:25:26 GMT ]
தண்டனை காலம் முடிந்தும் 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
[ Friday, 28-08-2015 13:34:23 GMT ]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.
[ Friday, 28-08-2015 13:27:17 GMT ]
காலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 27-08-2015 03:54:21 ]
ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இலங்கையில் இருக்கிற தமிழர்களின் பிரச்சினை.....! அவர்களாகவே அதற்கு முடிவு கட்டிக் கொள்ள விடுவதுதான் நியாயம்....! இப்படியொரு பார்வை தமிழக பத்திரிகையாளர்கள் பலருக்கும் இருந்தது, இருக்கிறது.