செய்தி
 Photo
நோர்வே தமிழர்களுடன் தமிழீழ உணர்வாளர் நடிகர் மணிவண்ணன்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 03:55.01 PM GMT ]
பல ஆண்டுகளாக தமிழின விடுதலைக்காக போராடி வருகின்ற தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மதிப்புக்குரிய திரு மணிவண்ணன் அவர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் அன்னை பூபதி தமிழ்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

தன்னுடைய துறைசார்ந்து சில வியாபார நிறுவனங்களின் அழைப்பில் வந்திருந்த போது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழீழ மக்களையும் பார்ப்பதே தன்னுடைய முதற்பணியாக கொண்டதால் மக்களை சந்திப்பதர்க்கான ஏற்பாடுகளை மிக குறுகிய நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்ததோடு அவரின் சில கருத்துக்கள் ஆழ்மனதில் ஈரத்தையும் ஏற்படுத்தியது.

குறிப்பாக தன்னுடை பெற்றோர்களின் மரணத்தில் அழாமல் மனதை திடமாக வைத்திருந்ததாகவும் ஆனால் தன்னோடு பாசமாக பழகிய தம்பி தங்கைள் முள்ளிவாய்க்காலில் புதைத்த இடமே தெரியாமல் போன போது தான் மனம் இடிந்து பல மாதங்களாக அழுததாகவும் கூறி அவருடைய குரல் தளர்ந்து போனதையும் பார்க்க முடிந்தது.

இதேவேளை தான் தமிழீழத்தில் பிறந்திருந்தால் ஒரு போராளியாக பிறந்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி மாவீரனாக புதைக்கப்பட்டிருப்பேன் என்பதையும் உறுதியோடு கூறியிருந்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 30-01-2015, 08:28.49 AM ]
புலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது.
[ Friday, 30-01-2015, 07:45.25 AM ]

பாடசாலை அதிபர்கள் நிதி சேகரிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறைமை தொடர்பில் சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவம்சம் தெரிவித்துள்ளார்.

 

[ Friday, 30-01-2015, 07:29.09 AM ]
வத்தளை பிரதேச சபையின் தலைவர் தயாக ரத்நாயக்க அல்விஸ், சபை உறுப்பினர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளார்.
[ Friday, 30-01-2015, 07:14.45 AM ]

புத்தளம் பிரதேசத்தில் சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ Friday, 30-01-2015, 07:06.50 AM ]
ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் சமுர்த்தி பயனாளிகளுக்கு திவிநெகும திட்டத்தின் கீழ் பகிர்ந்தளிக்கப்படவிருந்த பொருட்களின் ஒரு தொகை, கொத்மலை பிரதேச காரியாலய கட்டிடத்தில் மீட்கப்பட்டுள்ளது.
[ Friday, 30-01-2015 07:20:09 GMT ]
வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த வெள்ளை மாளிகையின் ஊடக துணைச்செயலாளர் எரிக் சூல்ட்ஸ் தலிபான்களை ஆதரித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 30-01-2015 06:43:42 GMT ]
பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தையொட்டி வீர தீர செயலுக்கான விருது பெற்ற ஒரு சிறுமியின் காதைப் பிடித்து செல்லமாக திருகிய படம் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
[ Friday, 30-01-2015 05:49:40 GMT ]
ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானின் முகமது அமிர் மீதான தடை முடிவுக்கு வந்துள்ளது.
[ Friday, 30-01-2015 08:27:49 GMT ]
பொதுவாக பழங்களை உட்கொள்வது நம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பக்கபலமாய் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 29-01-2015 07:16:30 ] []
இலங்கை அரசின் தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தியும் அந்த இனவழிப்புப் போருக்கு இந்திய மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குவதை நிறுத்தக் கோரியும் 29.01.2009 அன்று தன்னை எரித்து ஈகைச்சாவடைந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களின் ஆறாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.