செய்தி
30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்! கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 11:30.46 AM GMT ]

தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில், தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்' என்று மேலும்  கூறியுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 03-09-2015, 08:35.27 AM ]
இலங்கையின் 149 பொலிஸ் தினம் கிளிநொச்சியில், பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றுள்ளது.
[ Thursday, 03-09-2015, 08:26.10 AM ]
பழுத்த அரசியல்வாதியும் அரசியலில் நீண்ட கால அனுபவம் உள்ளவருமான இரா.சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டமை, இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நாசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 03-09-2015, 08:10.03 AM ]
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியுத்தத்தின் போது எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி தெரிவித்துள்ளார்.
[ Thursday, 03-09-2015, 07:45.23 AM ]
எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார்.
[ Thursday, 03-09-2015, 07:37.42 AM ]
நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள 82 வயதான சம்பந்தன் இலங்கை தமிழ் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகித்து வருகின்றார்.
[ Thursday, 03-09-2015 00:12:15 GMT ]
அகதிகளை பிரித்தானியாவுக்கு அனுமதிக்கவில்லை என்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடியாது என்று ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா எச்சரிக்கை விடுத்துள்ளன.
[ Thursday, 03-09-2015 00:12:34 GMT ]
விலை உயர்ந்தத பைக் வகைகளில் ஒன்றான ஹார்லி டேவிட்சன் பைக்கை ஹைதராபாத்தில் உள்ள ஷோ ரூமிலிருந்து நூதான முறையில் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 03-09-2015 07:21:53 GMT ]
இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை வெகுவாக ரசித்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
[ Thursday, 03-09-2015 05:48:08 GMT ]
இணைய உலகை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதிய லோகோவினை வெளியிட்டுள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 02-09-2015 18:16:29 ] []
இலங்கை வரலாற்றிலே புதிய சக்தி பாய்ச்சப்பட்டுள்ள ஒரு பாராளுமன்றமாக 8வது பாராளுமன்றம் உருவாகியுள்ளது. இடம்பெற்ற முதலாவது அமர்விலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், உறுதியான ஒரு எதிர் கட்சியின் தேவையினை மிக தெளிவாக உணர்த்தியுள்ளது.