செய்தி
(2ம் இணைப்பு)
Photo
இறுதிப் போரின் போது பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை! இராணுவம் அறிக்கை
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:40.45 PM GMT ]
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத தளபதி ஜகத் ஜயசூரியவினால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று காலை கையளிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள ஷெல் தாக்குதல் சம்பவங்கள் இலங்கை இராணுவத்தால் உண்டாகவில்லை. கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களை பாதுகாத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உண்டான பாதகங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் சட்ட விரோத செயற்பாடுகளால் உண்டாகியிருக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில்  இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு பாதுகாப்புக்காக ஓடி வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை, போதிய பயிற்சி இல்லாத தமிழீழ விடுதலை புலிகள் ஏவிய பீரங்கி குண்டுகள் பொதுமக்கள் குவிந்திருந்த இடங்களில் விழுந்தமை, சிறுவர் முதியோர் உட்பட பொதுமக்களை கட்டாயப்படுத்தி அவர்களை யுத்த நடவடிக்கையில் இணைத்தமை உட்பட இந்த செயற்பாடுகள் காணப்பட்டன' என்றும் இராணுவம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களை நிறுத்த வேண்டிய தமது கடமையில் தவறிட்டதாகவும் இலங்கை இராணுவம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2ம் இணைப்பு

போரில் நடந்த பொதுமக்கள் உயிரிழப்புக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு--இலங்கை இராணுவ நீதிமன்றம்

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி இராணுவம் நியமித்த இராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து இராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது. இராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மீதே இந்த பொதுமக்கள் உயிரிழப்புக்குப் பழிபோட்டிருக்கிறது.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய “விடுதலைப்புலிகள்தான் பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அது மட்டுமல்ல சிவிலியன் மக்கள் கூட்ட்த்தின் மத்தியிலிருந்து குண்டுத்தாக்குதல்களை அவர்கள் தான் நடத்தினார்கள். இந்தக் குற்றத்துக்கு முழுப்பொறுப்பும் அவர்கள்தாம் ஏற்கவேண்டும். இதை அவர்கள் செய்யாமல் இருந்தால் போரில் ஏற்பட்ட எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதம் நடந்திருக்காது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இந்த எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதத்துக்கு விடுதலைப்புலிகள்தான் பொறுப்பு.” என்றார்.

எனவே எதேச்சையான இந்த பொதுமக்கள் உயிர்ச்சேதம் என்று நீங்கள் சொல்லும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா. என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “இந்த எதேச்சையான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பது யதார்த்தமானதுதான். இந்த விஷயம் போரின் இறுதிக்கட்டத்தில் சில காரணங்களால் வெளிவராத ஐ.நா மன்ற அறிக்கையில்கூட இதில் சுமார் 7700 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லலாம். இதில் விடுதலைப்புலிகளும் உள்ளடங்கியிருக்கலாம். இதில் கொல்லப்பட்ட சிவிலியன்கள் இந்த எதேச்சையாக கொல்லப்பட்டவர்களில் சிலராக இருக்கலாம். இவர்கள் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்காக அவர்களால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கலாம் என்றார்.

போர்க்காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்று ஐ.நா மன்ற வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கை கூறியது. எனவே இது குறித்து இராணுவமே தன்னைத்தானே விசாரித்து தன்னையே நிரபராதி என்று கூறிக்கொள்வதைவிட ஒரு சர்வதேச விசாரணை மேலும் பொருத்தமானதாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பிரச்சனை விசாரிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியும் இதற்காகவே வடக்கில் தமிழ் அதிகாரிகளைக் கொண்டு ஒரு மக்கள் தொகை கணக்கீடு நடத்தப்பட்டது. அவர்கள் தந்த அறிக்கையும் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 7400 இருக்கும் என்றே கூறியது என்றார்.

மேலும்இஅவர் கூறுகையில் இதில் பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இந்த நாடுகள் தங்கள் நாடுகளுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை தருவதில் போதிய ஒத்துழைப்புக் காட்டவில்லை என்றார்.

மேலும் இராணுவ விசாரணை சர்வதேச விசாரணை என்றெல்லாம் கூறும் போது இலங்கை ராணுவ சட்டமும் பிரிட்டிஷ் இராணுவ சட்டத்திலிருந்து வந்ததுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. 1949ல் இராணுவம் உருவாக்கப்பட்ட போது இந்த சட்டம் உருவானது. பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படும் இதே நடைமுறைதான் இங்கும் பின்பற்றப்பட்டது என்றார் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

 


 

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 31-03-2015, 11:55.02 AM ]
குடும்ப சுகாதார உத்தியோகத்தர்கள் அடங்கலான தாதியர் மற்றும் சுகாதார சேவையாளர்கள் இரண்டாயிரத்து 738 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
[ Tuesday, 31-03-2015, 11:54.34 AM ]
பண மோசடியில் ஈடுபட்டதாக மன்னார் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து பொலிஸாரும் குற்றவாளிகள் இல்லை என்று மன்னார் மேல் நீதிமன்ற ஆணையாளர் மகிந்த திகிதினிய தீர்ப்பு வழங்கியுள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 11:45.16 AM ]
பொதுபல சேனாவின் பொது செயலாளர் ஞானசார தேரர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 11:31.50 AM ]
குடம் ஒன்றில் கிடந்த மர்மப்பொருள் வெடித்ததில் படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 11:17.09 AM ]
இந்தியாவின் யாழ்ப்பாணத் துணைத்தூதர் நடராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டைக்காட்டிற்கு, அப்பகுதி கடற்றொழிலாளர்களின் அமைப்புக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
[ Tuesday, 31-03-2015 11:58:31 GMT ]
துருக்கி நீதிமன்றத்திற்குள் நுழைந்த இடது சாரி அமைப்பு சேர்ந்த ஒருவன், வழக்கறிஞர் ஒருவரை பிணையக்கைதியாக பிடித்து வைத்துள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 08:44:06 GMT ]
சென்னையில் கைதான போலி மருத்துவ தம்பதியர் பிரபல நடிகர் விஜய்பாபுவிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
[ Tuesday, 31-03-2015 07:44:06 GMT ]
உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்திய அணியை வெற்றி கொள்ளாதது குறித்து மோக்கா மோக்கா என்ற விளம்பரம் வெளியிடப்பட்டது.
[ Tuesday, 31-03-2015 07:28:30 GMT ]
உலகளவில் பெரும்பாலான அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸ் என்றால் அது பிராய்லர் சிக்கன் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 30-03-2015 12:26:28 ]
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிந்ததும், உடுக்கை இழந்தவன் கைபோல நீண்டிருக்கவேண்டும் பாரதத்தின் கை. ஆனால், கொல்லப்பட்ட எம் உறவுகளைக் காப்பாற்ற நீளாமல், கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுக்க இந்த தேசத்தின் கை நீண்டது.