செய்தி
கிளிநொச்சியில் படையினரின் ஏற்பாட்டில் அழகு ராணிப் போட்டி!- அதிர்ச்சியில் உறைந்துள்ள சமூக ஆர்வலர்கள்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 05:02.23 PM GMT ]
கிளிநொச்சி- மாவட்டத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு படையினரின் ஏற்பாட்டில் அழகுராணி போட்டியொன்று நாளை (11.4.2013) கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இது குறித்து மாவட்டத்திலுள்ள சமுக ஆர்வலர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட களியாட்ட நிகழ்வுகளுக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகம் தற்போது பெருமெடுப்பில் அலங்கரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இங்கு நாளை வியாழன் இரவிரவாக பல களியாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இதில் மிக முக்கியமான நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் என்ற பெயரில் சேர்க்கப்பட்ட தமிழ் இளம் பெண்களைக் கொண்டு அழகுராணி போட்டி நடத்தப்படவுள்ளது.

மேலும் முக்கிய பங்காளிகளாக இளம் முன்பள்ளி ஆசிரியர்களே கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டும் மாவட்ட அழகுராணிக்கு ஸ்கூட்டி பப் மோட்டார் சைக்கிள் ஒன்று படையினரால் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டியில் பெண்கள் கலந்துகொள்ளுங்கள் என படையினர் மாவட்டத்தில் அழகான பெண்களின் வீடுகளுக்குச் சென்று கோரிக்கை விடுத்து வருகின்றார்களாம்.

இந்நிலையில் போரும் பண்பாடும் நிறைந்திருந்த மண்ணில் இந்த புல்லுருவிகளின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத நிலையில் மாவட்டத்திலுள்ள புத்திஜீவிகளும், சமுக ஆர்வலர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருப்பதாக கூறப்படுகின்றது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 14-02-2016, 05:27.33 AM ]
இலங்கையில் 21 வயதிற்குட்பட்ட 9400 யுவதிகள் காதலர் தினத்தில் கன்னித் தன்மையை இழக்கின்றனர்.
[ Sunday, 14-02-2016, 05:05.52 AM ]
வடக்கில் படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான அறிக்கை இந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
[ Sunday, 14-02-2016, 04:51.51 AM ]
நிதி மோசடி விசாரணைப் பிரிவை ரத்து செய்யக் கோரும் நபர்கள் நாளை நீதிமன்றை மூடவும் சொல்வார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
[ Sunday, 14-02-2016, 04:48.48 AM ]
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தின் பின் மர்ம மௌனம் ஒன்று நிலவி வருவதாக திவயின பத்திரிகை செய்தி விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
[ Sunday, 14-02-2016, 04:41.57 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெறும் ஊடக கண்காட்சி மட்டுமே என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
[ Sunday, 14-02-2016 00:23:39 GMT ]
காதலர் தினத்தினை முன்னிட்டு ஹாங்காங் நகரில் ஒளிரும் வெள்ளை ரோஜா பூந்தோட்டத்தை உருவாக்கி காதல் ஜோடிகளுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
[ Sunday, 14-02-2016 00:36:15 GMT ]
கடற்படையில் சேருவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்திய கடற்படை வீராங்கனைகள் பாய்மர படகில் உலகைச் சுற்றி வர திட்டமிட்டுள்ளனர்.
[ Sunday, 14-02-2016 05:32:50 GMT ]
இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய அணித்தலைவர் டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.
[ Saturday, 13-02-2016 12:27:48 GMT ]
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 13-02-2016 17:16:19 ]
தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேரெதும் வந்துவிடப்போவதில்லை.