செய்தி
தமிழீழ சுதந்திரச சாசனம் : லண்டனில் பொதுக்கூட்டமும் -கலந்துரையாடலும்!
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 12:30.25 PM GMT ]
உலகத் தமிழர்களால் மே-18ம் நாள் முரசறையப்படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடலுடன் கூடிய பொதுக்கூட்ட மொன்று லண்டனில் இடம்பெறவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஓருங்கிணைப்பில் உலகப் பரங்பெங்கும் உள்ள பல தமிழர் அமைப்புக்களின் கூட்டிணைவில் இந்த தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்திற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்குகின்ற சகல தமிழர் அமைப்புக்களையும், ஊடகங்களையும் உள்ளடக்கி எதிர்வரும் ஞாயிறு (14-04-2013) மாலை 2:30 மணிக்கு Northolt Village Community Centre / The Manor House / Ealing Road / Northolt UB5 6AD எனும் இடத்தில் ஒரு பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் ஏற்பாடு இடம்பெறுகின்றது.

1) தமிழீழ சுதந்திர சாசனம் அறிமுகம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அறிமுக உரை
2) பிரித்தானிய தமிழர் அமைப்புக்களின் நிலைப்பாடு: தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பான கருத்துரைகள்
3) சாசன உருவாக்கத்தில் அனவைரது பங்களிப்புக்குமான செயல்முறை
4) தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்தும் அது தொடர்பிரான கருத்துப்பட்டறை

ஆகிய விடயங்களை உள்ளடக்கியதாக இடம்பெறும் இந்நிகழ்வில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புக்கள் - ஊடகதுறை சார்ந்தவர்கள் - வர்தகர்கள் - சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பில் 07711558123 - 07960412227ஆகிய தொடர்பிலக்கங்கள் வழியே பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழத்திற்கான சுதந்திர சாசனத்தினை வரைந்திடுவோம் வாரீர்......

தமிழீழ சுதந்திர சாசனத்தின் இணையம் :
www.tamileelamfreedomcharter.org/

சுதந்திர சாசன உருவாக்க கருத்தறிவில் இணைய வழி பங்கெடுத்துக் கொள்ள:

தமிழ் : http://tamileelamfreedomcharter.org/?page_id=71
ஆங்கிலம் : http://tamileelamfreedomcharter.org/?page_id=61
அறிமுகக்
கையேடு : http://fr.calameo.com/read/000341502cda4a20894a7

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 31-03-2015, 08:12.29 AM ]
தாயகம், தேசியம், சுயர்நிர்ணயம் என்ற கோட்பாடுகளில் மிகத் தெளிவாக அந்த இலக்கை நோக்கி நகர்கின்ற ஒரு மையமாகவே மாகாண சபையை முன்னெடுக்கின்றோம் என அவைத் தலைவா சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்
[ Tuesday, 31-03-2015, 07:47.55 AM ]
19வது அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் தோற்கடிக்க செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய தொடர்பில் எழும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை பிரஜைகள் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015, 07:13.32 AM ]
தேர்தல் வன்முறை, வாக்கு மோசடி, தேர்தல் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள மத்திய மாகாண சபை தவிசாளர் மஹிந்த அபயக்கோனுக்கு கண்டி மேல் நீதிமன்றம் இரண்டரை வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
[ Tuesday, 31-03-2015, 06:59.11 AM ]
முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட முறைபாடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது,
[ Tuesday, 31-03-2015, 06:53.56 AM ]
பொது தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதமராக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை வெற்றி பெற செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு வழங்க வேண்டுமென நீர்ப்பாசன அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015 07:33:21 GMT ]
வெடிகுண்டு மிரட்டலால் துருக்கிய விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:46:07 GMT ]
உக்ரைனுக்கு மேம்படுத்தப் படுவதற்காக அனுப்பப்பட்ட இந்தியாவின் ஐந்து AN-32 ரக போர் விமானங்கள் மாயமாகிவிட்டதாக ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.
[ Tuesday, 31-03-2015 05:06:26 GMT ]
நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
[ Tuesday, 31-03-2015 07:28:30 GMT ]
உலகளவில் பெரும்பாலான அசைவ பிரியர்களின் முதல் சாய்ஸ் என்றால் அது பிராய்லர் சிக்கன் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 29-03-2015 06:34:44 ] []
ஐ.நா மண்டபத்தில் கடந்த புதன்கிழமை திரையிடப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான ஆவணப்படத்தினை பார்வையிட்ட தமிழ் மற்றும் வேற்றின பிரதிநிதிகள் கண்ணீர் சிந்தி கலங்கினர்..